பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 லாம் சரித்திர ஆசிரியர்கள் கண்டு ஆராயலாம். நாம் சரித்திர ஆசிரியர்கள் அல்லவே! தலயாத்திரை துவங்கி யவர்கள் அல்லவா? ஆதலால் நேரே எல்லோராக் குடை வரை நோக்கிக் காரை செலுத்தச் சொல்லி விரைவி லேயே அங்கு போய் சேரலாம். எல்லோராவில் உள்ள குடைவரைகள் முப்பத்தி நாலு . அவைகளை எல்லாம் சரியாகப் பார்க்க வேண்டுமென்றால் ஒருநாள் காணாது. ஆதலால் அதிகாலையிலேயே அவுரங்கள் பாத்தைவிட்டுப் புறப்பட்டு எல்லோரா போய் சேர்ந்து விடவேண்டும். குடைவரைகளுக்கு இரண்டு பர்லாங்குக்கு இப்புறமே காரை நிறுத்தி விடுவார்கள். அப்படி நிறுத்திய இடத்திற்கு பக்கத்திலேயே புதைபொருள் இலாக்கா அலுவலகம் இருக்கிறது. அங்கே சென்று ரூ. 10|-கட்டணம் செலுத்தி ஒருவழி காட்டியையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது அதற்கு எல்லாம் வசதி இல்லாதவர்கள் பேசாமல் இக்கட்டுரைப்பிரதி ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றால் போதும். இங்குள்ள குடைவரைகள் முப்பத்திநான்கு என்று முன்னமேயே சொல்லி இருக்கின்றேன். அவற்றில் சரிபாதி, ஆம் பதினேழு குடைவரைகள் இந்து சமயச் சார்புடை யவை. பன்னிரண்டு பெளத்த மதச்சார்பும் ஐந்து சமண மதச்சார்பும் உடையவை. இக்குடைவரைகளுக்கு எல்லாம் நடுநாயகமாக இருப்பதுதான் கைலாசநாதர் கோயில். இதுவும் ஒரு குடைவரையே என்றாலும் இதனைக் கண்ணுறுபவர்கள் இது மலையைக் குடைந்து அமைத்த ஒன்று என்று எண்ணவே இயலாதவாறு பூரணமான பொலிவோடு ஒரு தனிக் கோயிலாகவே இருக்கிறது. இக் குடைவரை மற்றைய குடைவரைகளைப் போல மலைச் சரிவில் பக்கத்திலிருந்து குடைந்து எடுக்கப்பட்டதல்ல. இக் குடைவரையை உருவாக்கிய விஸ்வகர்மன்-சிற்பி வானுல கத்தில் இருந்தே இறங்கி இருக்க வேண்டும். அப்படி இறங் கியவன் ஒரு மலை உச்சியில்தானே இறங்கியிருக்கிறான்.