பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திற்கிறாள் மகாதத்தின் மேல். இத்தோடு இக்குடைவரை உள்ளே பார்வதி பரமேஸ்வரன் திருமணக் கோலமும் உரு வாகி இருக்கிறது. இங்குள்ள ஆடவரும் பெண்டிரும் அணிந்: திருக்கும் அணிகளும், மணிகளும், ஆடைகளும் கிரீடங்களும் மிக்க அழகாக இருக்கின்றன. 14 காரட் தங்கத்தில் நகை, செய்யும் பொற்கொல்லர்கள் எல்லாம் இங்கு போய்ப் பயிற்சி பெற்று வரலாம். 29-வது குடைவரையைத் தான் சீதாநாகினி என்கின்றனர். அதாவது சீதை குளித்த இடம்: என்று நல்ல தமிழில் சொல்லலாம். சீதை இங்கு ஓடும் ஏலா நதியில் குளித்தாள் என்று கதை, ஏலா நதி ஓடும் எல்லபுரா என்ற கிராமத்தின் பெயர்தானே எல்லோரா என்று திரிந் திருக்கிறது. இக்குடைவரைக்கு தென்பக்கத்திலேயே அந்த ஏலா நதி ஓடுகிறது. நான் போன போது அங்கு தண்ணிரே இல்லை. நீரில்லா ஆறு தமிழ் நாட்டின் பாலாறு மாத்திரம் அன்று, அந்த ஏலா ஆறும் கூடத்தான், என்று அறிவதிலே நமக்கு ஒரு திருப்தி. இங்குள்ள குடைவரையில் சிவ பார்வதி கோலம் மிக்க அழகாக இருக்கிறது. தாமரைத் தண்டும் இடைபுகா தனம் என்றெல்லாம் காளிதாசன் வர்ணிக் கிறானே அத்தகையப் பெண்கள் எல்லாம் இங்கே வந்து உருப்பெற்று நிற்கிறார்களோ என்று தோன்றும். இவர் களையே நின்று பார்த்துக் கொண்டிருந்தால் போதுமா? 32-வது சமணக் குடைவரையையும் காண வேண்டாமா? அதனுல் வெளியே வந்து 32-வது குடைவரைக்குள் நுழைய லாம். இக்குடைவரை இரண்டு அடுக்குமாடியுடன் கூடியது. என்பதால், கட்டப்பட்டது என்று எண்ணிவிடாதீர்கள். மலையைக் குடைந்து இரண்டு அடுக்குமாடிகளாகவே அமைத்திருக்கிறார்கள். இங்குள்ள மேல்மாடியையே இந்திர சபா என்கின்றனர். இதுவும் இருநூறு அடி துாரம் மலையைக் குடைந்து அமைத்த குடைவரைதான் கீழ் தளத் தில் மகாவீரர் சமண தீர்த்தங்கரர் எல்லாம் இருக்கின் றனர். எல்லோரும் நிர்வாண வடிவிலே இருக்கின்றனர். மகாவீரர் தியான முத்திரையோடு இருக்கும்கோலம் அழகு வாய்ந்தது. மாடி ஏறினால் ஒரு பெரிய மண்டபம் இருக்