பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 உடையவை. இங்குள்ள சோதிர்விங்கத்தைப் பற்றி ஒரு வரலாறு. கைலைமலையை அசைத்த ராவணன் சாம கானம்பாடி விடுதலை பெற்றான் என்று தெரியும். அவனது இசையில் மயங்கி இறைவன் அவனுக்கு ஒரு ஆத்ம லிங்கத் தைப் பரிசளிக்கிறான். அதை தலையின் மேல் தாங்கி நடக் கிறான் ராவணன். அதன் கனத்தை அவனால் தாங்க முடிய வில்லை. இறைவனிடமே அதனை எடுத்துச் செல்ல ஆள் கேட்கிறார். அவரும் அந்த லிங்கத்தை இருகூறாக்கி அவற்றை ஒரு காவடியில் வைத்து எடுத்துச் செல்லக் சொல்கிறார். அப்படி எடுத்துச் சென்றவன் தாகத்துக்குத் தண்ணீர் குடிக்க காவடியை தன்னை அடுத்து நின்ற ஒரு பிராமணச் சிறுவனிடம் கொடுக்கிறான். இந்த பிராமணச் சிறுவனோ வேறுயாருமில்லை. பிள்ளையார்தான். பிள்ளை யார் காவடியை வாங்கி அங்கேயே பூமியில் இறக்கிவைத்து விடுகிறார். பூமியில் தங்கிய இறைவன் அங்கேயே வேர் ஊன்றி நின்று விடுகிறார். அப்படித்தான் இந்த சோதிர் விங்கர் அங்கே நிலை பெற்றிருக்கிறார். இந்த யாத்திரை மிகச்சிறப்ப்ானது என்று சொன்னால் நீ ங் க ள் மறுக்கமாட்டீர்கள். எல்லோராவிலுள்ள சிற்பச் செல்வங்களை எல்லாம் காணும் வாய்ப்போடு இரண்டு சோதிர்லிங்க தரிசனமும் கிடைப்பது என்றால் எளிதான பாக் கி ய மா என்ன? சரி, இந்த மன நிறைவோடேயே திரும்பி அவுரங்காபாத் வந்து ஜாகையில் தங்கி சிரமபரிகாரம் செய்துக் கொள்ளலாம். நாளைக்கு அறுபது எழுபது மைல் பயணம் செய்தல்லவா அஜந்தா செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் தக்க முறையில் உடலுக்கு ஓய்வு கொடுத்துக் கொள்வோமா. உள்ளம் குதுரகலித்துக் கொண்டிருக்கும்போது அதற்கு ஓய்வு தேவை இல்லைதான்.