பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும் புன்னகையின் புதுகிலவும் போற்றவரும் தோற்றம் துங்க மணிமின்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னைப் பார் என்று சொன்னாள் அங்கு அதனில் கண்விழித்தேன் அடடாவோ அடடா! அழகுகென்னும் தெய்வங்தான் அது என்றே கண்டேன். என்று தன் அழகு தெய்வ தரிசனையைக் கூறுகிறான் பாரதி. அழகுத் தெய்வம் அவருக்குப் பதினாறு வயது நிரம்பிய இளவயது மங்கையாகக் காட்சிக் கொடுத்திருக்கிறது. இதைப்படித்த எனக்கு ஒரு சந்தேகம். உண்மையிலேயே அழகுத் தெய்வம் பெண்மை உருவில்தானா? பறவை வினத்தில் சேவலும், மயிலும், விலங்கினத்தில் சிங்கமும் காளையும்தானே அழகுடையவைகளாக இருக்கின்றன. ஏன் இந்த மனித இனத்தில் மட்டும் பெண் அழகுடைய வளாகக் கருதப்படுவானேன் என்றெல்லாம் எண்ணுவேன். ஆனால் உண்மையில் பெண்ணே அழகு வாய்ந்தவள் என்பதை தமிழ் நாட்டுக் கோயில்களில் உள்ள சிற்ப வடிவங்களைப் பார்த்த போது தெரிந்து கொண்டேன். இன்னும் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும், அஜந்தாவில் உள்ள சித்திரங்களில் தீட்டிய பெண்ணைப் பார்த்தப்பின் முற்றிலும் தீர்ந்துவிட்டது. எவ்வித க ைடக் க எண் நோக்கினால், எவ்விதம் முறுவலிப்பதால், எவ்விதமான அங்க வளைவினால், கூந்தலை எவ்விதம் கட்டிக்கொள் வதால் ஆண்களின் நெஞ்சம் துடிதுடிக்கும் என்பதை அறியும் கலையில் அஜந்தா பெண்கள் மிக்க தேர்ச்சிப் பெற்றவர்கள். அவர்களது அம்பறாத்துணியிலே மனிதனது