பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 மலரை ஏந்தி நிற்பார். தலையை ஒரு பெரிய கிரீடம் அலங்கரிக்கும். இந்த அழகிய போதி சத்துவரைப் போல இன்னும் சில போதிசத்துவர் சித்திரங்கள் அங்கு உண்டு என்றாலும் சிதையாது அழியாத வர்ணத்தில் இருப்பவர் அந்தப் பெரிய போதிசத்துவரே. இன்னும் இங்கேயே சிபிச் சக்கரவர்த்தியின் வரலாறு, பாரசீகத்து துரதர்கள் சாளுக்கிய மன்னர் புலிகேசியை அவனது அரசவையில் சந்தித்தல், இத்துடன் பல ஜாதகக் கதைகள் எல்லாம் சித்திரவடிவில் இருக்கும். இன்னும் புத்தரது ஒன்றுவிட்ட சகோதரனான நந்தன் பெளத்த மதத்தைத் தழுவிய வரலாறும் சித்திரவடிவிலே அங்கே உருப்பெற்றிருக்கும். நந்தன், நந்தனது மனைவி சுந்தரி முதலானோர் எல்லாம் சித்திர உலகிலே சிறந்த சாதனைகள். மிதிலை மன்னன் மகாஜனகனது வரலாறும் இங்கு உயிர் ஓவியமகக தீட்டப் பெற்றிருக்கிறது. இங்குள்ள சித்திர விசித்திரங்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம், எவ்வளவு நேரம் ஆனாலும். நாம் பார்க்க வேண்டியவை இன்னும் இருபத்தொன்பது குடை வரைகள் இருக்கின்றனவே என்று காவல்காரன் நமக்கு ஞாபகம் ஊட்டி நம்மை நகரச் செய்வான். அவன் சொல்கிறபடியே நகர்ந்து நாமும் இரண்டாவது குடை வரைக்குச் செல்லலாம். இது அளவில் முதல் குடைவரையை விடச் சிறியதுதான் என்றாலும் அழகில் அதற்கு குறைந்தது அல்ல. இதுவும் ஒரு விஹாரமே. இங்கும் ஒரு தாழ்வாரம் உண்டு. அத்ைதாங்கும் துரண்கள் உண்டு. சிறந்த வேலைப் பாடுகளுடன் கூடிய வாயில் ஒன்றும் உண்டு. இங்கும் ஒரு புத்தர் உள் கோயிலில் இருக்கிறார். அவர் பக்கத்தில் ஒரு பத்மபாணி. இங்குள்ள சித்திரங்கள் பல வரலாறுகளைச் சித்திரிக்கும். விதானத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் புத் தரது தா யான மாயாதேவியின் கனவுகாட்சி இருக் கிறது. .