பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 களில் எல்லாம் புத்த ஜாதகக் கதைகளின் காட்சிகளை சித் திரங்களாகத் தீட்டியிருக்கின்றனர். ஆனால் இங்கு நம் கண்ணை முதல் முதல் கவர்வது இந்த ஹாலிற்கும் அப்பால் அமைந்த கருவறை போன்ற ஒர் உள் அறையிலே உள்ள புத்த விக்கிரகம்தான். கிட்டத்தட்ட பன்னிரண்டு அடி உயரத்தில் புத்தர் உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார். அவர் இருக்கும் நிலையை தர்மசக்கர பிரவர்த்தன முத் திரை.என்கிறார்கள். இச்சிற்பவடிவத்தில் உள்ள சிறப் பான அம்சம் என்னவென்றால், அச்சிலைவடிவில் உள்ள புத்தர் முகத்தில் மூன்று பாவங்கள். காவலனை வேண்டிக் கொண்டால் அவன் தன் கையில் உள்ள விளக்கைத் தூக்கிப் பிடித்து மூன்றுக் கோலங்களையும் காட்டுவான். நேரே நின்றால் அவர் நம்மைப் பார்த்து புன்னகை புரிவார். வலப்பக்கம் ஒதுங்கினால் அப்படியே தியானத் தில் அமர்ந்து விடுவார். இடப்புறம் ஒதுங்கினால் முகத் திலே ஒரு சாந்தியை நிலவவிடுவார். இப்படி உள்ளத்தில் உள்ள உணர்ச்சிகளை எல்லாம உருவாக்கிக் காட்டும் அற்புத சிற்பமாக முதல் குடைவரையிலே புத்த பகவான் நமக்கு காட்சி தருகிறார். அஜந்தாவில் சித்திரங்கள்தான் உண்டு என்றல்லவா எண்ணிக்கொண்டிருந்தோம்,சிற்பத்தி லும் அஜந்தா சிறந்து விளங்குகிறது என்பதற்கு இந்தப் புத்த வடிவமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் புத்தரது இருமருங்கிலும் அமர்ந்திருப்பவர் இருவர். ஒரு பக்கத்தில் வஜ்ரபாணி இன்னும் புத்தரைச் சுற்றி அவருடைய ஐந்து சிஷ்யர்கள் அவர்கேைய பஞ்சவர்கீய பிகr க்கள் என்பர். இன்னும் எண்ணற்ற மலர்களும், கொடிகளும், மகர தோரணங்களும், நாகர் வடிவங்களும் இவற்றை எல்லாம் பார்த்து அதிசயித்துக்கொண்டே நிற்கலாம். மத்திய ஹாலில் உள்ள சித்திரங்களில் சிறப்பானது போதிசத்துவருடைய சித்திரம்தான். கம்பீரமான வடிவம் என்றாலும் கருணைததும்பும் முகவிலாசம். கண்களை முழுவதும் மூடாமல் இருக்கும் நிலை. கையிலே ஒரு