பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 ஆராய்பவர்களுக்கு அஜந்தா குடைவரை ஓர் அற்புதமான நிலைக்களனாக அமையும். - எப்படி எல்லோராவில், இந்து சமயம், சமணம் பெளத்தம் மூன்றும், இணைந்திருக்கிறதோ அதேபோல அஜந்தா குடைவரைகளில், இந்தியக் கட்டிடக்கலை, சிற்பக்கலை, சித்திரக்கலை மூன்றுமே இணைந்திருக் கின்றன. இப் படி ப் பொதுப்படையாக மேலும் மேலும் சொல்லிக் கொண்டு போவதைவிட குடைவரை குடைவரையாக நுழைந்து அங்குள்ள அதிசயங்களை பார்த்து வருவதே நல்லது. அஜந்தா குடைவரைகளைக் காண கட்டணம் ஒன்றும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அங்குள்ள சித்திரங்களை பார்க்கவேண்டும் என்று விரும்பினால் சும்மா கைகளை வீசிக்கொண்டு நடந்தால் சரிப்படாது. முதலில் அங்குள்ள காவல் காரரை அணுகி ஐந்து ரூபாய் கட்டணம் கட்டினால் முக்கியமான குடை வரைகளில் எல்லாம் விளக்குப் போட்டு, ஆம் மின் விளக்குகள் போட்டுக் காட்டுவார். அந்த விளக்குகள் இல்லாமல் சித்திரங்களையோ சிற்பங்களையோ கான இயலாது என்பது ஞாபகம் இருக்கட்டும். . சரி இனி முதல் குடைவரையில் துழையலாம். அது ஒரு. பெரிய விஹாரம். இக்குடைவரையில் முன்புறம் 6 அடி நீளமும் 9 அடி அகலமும் உள்ள ஒரு பெரிய வராந்தா இருக்கிறது. இந்த வராந்தாவை நான்கு தூண்கள் தாங்கி நிற்பது போல் குடைந்து எடுத்திருக்கிறார்கள். இந்த வராந்தாவில் இருந்து உள் குடைவரைக்குச் செல்வதற்கு. மூன்று பெரிய. வாயில்கள் இருக்கின்றன. வாயில்களில் எல் லாம் மலர் வளையங்களும் நாகவடிவங்களும் செதுக்கி யிருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் 64 அடி சதுரத்தில் ஒரு பெரிய ஹால். அதைத் தாங்குவதற்கு 20 துரண்கள். துரண்கள் ஒவ்வொன்றிலுமே அழகான சிற்பவடிவங்கள். இங்குள்ள விதானங்களில் மலர் போன்றசித்திரங்கள். சுவக்