பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கோளவடிவில் இருக்கும். ஸ்தூபியின் உச்சியில் புனிதத் தன்மை வாய்ந்த குடை ஒன்றிருக்கிறது. அதனைச் சத்திராவளி என்கின்றனர். அதைச் சுற்றி துரண்கள் நிறுத்தியிருப்பது போல் கட்டி வைத்து இருக்கின்றனர். அதனையே ஹார்மிகம் என்கின்றனர். ஸ்து பிகள் மீது ஏறி அதனைச் சுற்றிவர பிரதசஷ்ணப் பிரகாரம் அமைத் திருக்கின்றனர். அங்கிருந்து தான் குடை பெட்டியை எல்லாம் காணவேண்டும். அதற்கு மேல் ஸ்தூபியில் ஏற முடியாது ஏறவும் கூடாது, - இனி ஸ்து பியை விட்டு வெளியே வரலாம். இந்தப் பெரிய ஸ்தூபியின் தெற்கு வாயிலுக்குப் பக்கத்திலே அசோகர் சாஸ்னத்துரண் ஒன்று உடைந்து கிடக்கிறது. அதில் பெளத்தர்கள் சமயச் பூசலை எல்லாம் விட்டுவிட வேண்டும் என்று அசோகர் பொறித்து வைத்திருக்கிறார். இது தான் 42 அடி உயரம் உள்ளதாக இருந்திருக்கிறது. இத் தூண்ணின் மேல் பணிபோன்ற வடிவுள்ள போதிகை ஒன்றும் அதன் மேல் நான்கு திசைகளையும் நோக்கும் நான்கு சிங்க வடிவங்களும் இருந்திருக்கின்றன. இதுதான் இன்று மண்ணில் புதையுண்டும் பெரும்பாலும் துண்டு துண்டுகளாக உடைந்தும் கிடக்கிறது. இவற்றை எல்லாம் சேர்த்து வைக்க புதை பொருள் ஆராய்ச்சியாளர் முயன் றிருக்கின்றனர். இதனைப் போன்ற அமைப்புள்ள துணையே சிதையாத நிலையில் சாரநாத்தில் காண்கின் றோம். அதை அங்கு செல்லும் போது பார்த்துக் கொள் வோம். இதுவே நமது குடியரசின் சின்னம் என்பது ஞாபகமிருக்கும். - பெரிய ஸ்து பிக்கு வடக்கிழக்கில் ஐம்பது கஜ தூரத்தில் மற்றொரு ஸ்து பி இருக்கிறது. இதையே ஸ்து பி எண் மூன்று என்று கணக்கிட்டிருக்கின்றனர். இது கி.பி. 150-ம் வருஷம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இது அமைப்பில் பெரிய ஸ்து பியை போன்றதே என்றாலும் அளவில் சிறியது. இதன்