பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பட பின்னர் அவைகளைக் கல்லாலேயே கட்டியிருக் கின்றனர். இவைகளை எல்லாம்விட, குன்றின் மேல் தளத்திலே வடபாகத்தில் இலங்கை பெளத்த சங்கத்தினர் ஒரு புதிய கோயில் ஒன்றைக் கட்டி அதில் புத்தபகவானை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இத்தனை ஸ்தூபிகளையும் பார்த்த, பின் அந்த புத்தர் சந்நிதிக்கும் சென்று வணங்கலாம். வணங்கிய பின், முன்தாள் பெருமைக் கண் நின்றான் முடிவெய்து காலும் கன்றே கினைந்தான் குணமே மொழிந்தான், தனக்கென்று ஒன்றானும் இல்லான், பிறர்க்கே உறுதிக்கு உழந்தான் அன்றே இறைவன் அவன் தாள் சரணங்கள் அன்றே. என்று குண்டலகேசி கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிக் கொண்டே வெளியே வரலாம். சாஞ்சியின் சரித்திரம் மிக்க குறைபாடுகள் உடையது. மெளரிய அரசர்கள் காலத்து சாஞ்சி புகழ் பெற்றிருந்: திருக்கிறது. மெளரிய வம்சம் rணித்த பின்னர் சுங்க வம்சத்தாரது ஆட்சியின் கீழ் வந்திருக்கிறது. அவர்கள் பெளத்த மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றாலும் அவர்கள் காலத்தில் இரண்டு ஸ்தூபிகள் எழுந்திருக் கின்றன. இப்போதுள்ள பெரிய ஸ்தூபியே சுங்க அரசர்கள் தான் கட்டினார்கள் என்பது ஒர் ஆராய்ச்சி. இல்லை, ஸ்து பியைச் சுற்றியுள்ள கல் கிராதிகள்தான் சுங்க அரசர் கட்டியவை என்பர் சிலர். ஹர்ஷர் காலத்தில்தான் தோரண வாயில்கள், மற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டன என்றும் கூறுவர். அதன் பின் சாஞ்சி ஸ்து பிகள், ஸ்தல்ங்கள் கவனிப்பாரற்றுச் சிதைந்து கிடந்திருக்கின்றன.