பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 ரண் சோட்ஜிக்கு, அந்த வீட்டையே இடித்துப் பெரிய கோயிலாகக் கட்டியிருக்கிறார்கள். அ. க் கோ யி ைல க் கட்டியவன் தாமிரம் என்ற ஊரைச்சேர்ந்த கோபால் நாயக் என்று கர்ண பரம்பரை வழங்குகின்றது. ஆனால் இக் கோயில் 1772-ல் சதாராவை சேர்ந்த பேஷ்வாவின் பொக்கிஷதாரரான கோபால் ஜகன்னாத் தாம்பேகர் என்ற மராட்டியர் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டினார் என்று சரித்திர ஏ டு க ள் பேசுகின்றன. கோபா ல் ஜகந்நாததாம்பேகர் என்பதைத்தான் கோபால் நாயக் என்று குறுக்கி வழங்குகின்றார்கள் போலும், கோயிலுள் ஒரு பெரிய தங்க சிம்மாசனத்தில் ரண்சோட்ஜி தேவியோடு எழுந்தருளியிருக்கிறார். அந்த சிம்மாசன பீடத்தை கெயிக்வாட் மகாராஜா ஒன்றைரை லட்சப் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுத்திருக்கிறார். ரண்சோட்ஜியின் உடலில் ஏற்பட்டுள்ன ரண காயங்களை இன்றும் காணலாம். ரண்சோட்ஜி துவாரகையில் உள்ள கண்ணன் வடிவிலேயே இருக்கிறார். சங்கு, சக்கரமும், கதையும் ஏந்திய திருக்கோலம். கண்ணன் என்னும் கருந் தெய்வம் என்பதற்கேற்ப நல்ல கருப்பு நிறத்தில் கருங்கல் வடிவில் அமைந்திருக்கிற மேற்கே பார்த்து நின்ற கோலம். கண்ணனை பல கோலங்களில் நவரத்தினங்களால் அலங் கரிக்கின்றனர். கோயிலுள் சென்று பார்த்து திருவடிகளைத் தொட்டு வணங்கலாம். கோயிலுக்குப் பக்கத்திலேயே கோமதி புஷ்கரணியிருக்கிறது. துவாரகையின் நதி வடிவ மாக இருக்கும் கோமதியே இங்கு புஷ்கரணியாக இருக் கிறாள் என்று கூறுகின்றனர். இந்த புஷ்கரணியில் டங்கேசுவரகட்டம், சலேசுவரி தேவி கட்டம் ரத்னகிரி கட்டம் முதலிய ஸ்நான கட்டங்கள் இருக்கின்றன. இவை களில் மூழ்கி எழுந்தால் வினைகள் எல்லாம் நீங்கும் என்பர். ஆனால் பாசி பிடித்து துர்நாற்றம் நிறைந்திருக்கும் இந்த புஷ்கணிரயில் ஸ்நானம் செய்ய நமக்கு மனம் வராது. ரண்சோட்ஜி ரணகாயத்துடனேயே கிடந்த புஷ்கரணி யானதால் ரத்த வாடையே அடிக்கிறது போலும், மேலும்