பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 பிரபலமான ஒரு காளி கோயில் இருக்கிறது. அங்கு பொன்னாலும் வெள்ளியாலும் அமைந்த வாயில்களும், விதானங்களும் பீடங்களும், இருக்கின்றன. எல்லாம் சிறந்த வேலைப்பாடுடன் விளங்குகின்றன. இங்கு வந்து வணங்கும் இந்துக்கள் எல்லாம் இன்னும் பொன்னையும் பொருளையும் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். என்ன அகமதாபாத் நகரிலேயே அதிக நேரம் இழுத்து அடித்து விட்டீரே, எப்போது சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்வது என்று தானே கேட்கிறீர்கள்? சரி. இனி தாமத மில்லாமல் நேரே சபர்மதி ஆசிரமத்திற்கே செல்வோம். அது அகமதாபாத்திலிருந்து ஐந்து மைலுக்கு வடக்கே இருக்கிறது. செல்வதற்கு பஸ் வசதி உண்டு என்றாலும், டாக்சியை வைத்துக்கொண்டு சென்றால்தான் ஆற அமர இருந்து பார்த்துத் திரும்பலாம். இன்று சபர்மதி ஆச்சிரமம் இரண்டு பகுதியாக இருக்கிறது. நடுவிலே பெரிய ரோடும் அ த ற் கு இருபக்கமும் ஆச்சிரமக் கட்டிடங்களுமாக இருக்கின்றன. வடகிழக்காய்ச் செல்லும் ரோட்டிற்கு வடக்கே பெரிய பெரிய கட்டிடங்கள் இருக்கின்றன. ഴ}ഭി ഖ് சபர்மதி ஆசிரமமாய் இருத்தல் இயலாது என்று எண்ணுவோம். அங்குதான் இன்றைய ஐந்தாண்டு திட்டத்தில் கட்டிய கட்டிடங்கள் இருக்கின்றன. இக்கட்டிடங்கள் காந்திஜி போதித்த எளிமையை எடுத்துக் காட்டுவதாக இல்லை. ஆனால் ரோட்டிற்குத் தென்புறம் இருப்பதே பழைய ஆசிரமக் கட்டிடங்கள். அங்கு காரை விட்டு இறங்கிய உடனேயே நமது உடல் புல்லரிக்கும். ஆம். பாபுஜியின் தபோ பூமியை அல்லவா மிதிக்கிறோம் என்ற உணர்ச்சியில் உள்ளம் பொங்கும். இங்கு நாம் காண வேண்டிய குடில்கள் பல உண்டு. இந்த ஆசிரமப் பகுதியை ஒட்டியே சபர்மதி நதி ஓடுகிறது. ஆசிரமம் நல்ல உயரமான கரையில் இருக்கிறது. ஆற்றுக்குள் இறங்க இரண்டு பெரிய படிக்கட்டுக்கள் இருக்கின்றன. ஆற்று வெள்ளத்தால் ஆசிரமம் பாதிக்கப்படாதபடி