பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 இரண்டாவது தடவையாக கி. பி. 649-ல் கட்டப்பட் டிருக்கின்றது. பின்னர் கி. பி. 792-அரேபியர்கள் இந்தியாவின் மீது படை எடுத்து வந்து இக் கோயிலை அழித்திருக்கின்றனர். மூன்றாவது தடவையாக கி. பி. 800லும் நான்காவது தடவையாக கி. பி. 10.75லும் கட்டப் பெற்றிருக்கிறது. ஐந்தாவது முறையாகத்தான் கி பி. 1114-ல் குமாரபாலா என்பவர் இக் கோயிலை விஸ். தரித்துக் கட்டியிருக்கிறார். இந்த பிரம்மாண்டமான கோயிலைத் தான் கஜினி மகம்மது இடித்துத் தரைமட்ட மாக்கி இங்குள்ள பெண்களையும் நவரத்தினங்களையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறான். அதன் பின் பல நூற்றாண்டுகளாக இக்கோயில் திரும்பவும் கட்டப்பட வில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரே சர்தார் பட்டேல் பெருமுயற்சி எடுத்து, முழுக்க புதுக் கோயிலாக கட்டி முடித்திருக்கிறார். இப்போது நாம் காணுகின்ற கோயில் இந்த புதுக்கோயிலே. நல்ல தொரு. மாடக்கோயில் போல் ஒரு பெரிய பீடத்திலேயே கட்டப் பட்டிருக்கிறது. சாண்ட்ஸ்டோன், என்னும் ஒருவித சிவப்பு நிறக்கல்லால் கோயில் முமுதும் கட்டப்பட்டிருக் கிறது. இடையிடையே சலவைக் கல்லையும் பொருத்தி நிறையச் சிற்பவேலைகளையும் செய்திருக்கிறார்கள். கிழக்கே பார்த்த வாயில், இரண்டு மாடிக்கட்டிடம்போல அமைத்து பெரிய பெரிய தூண்களை நிறுத்தி அழகு செய்: திருக்கிறார்கள். தோரணவாயில்களில் எல்லாம் சிற்ப வேலைகள் சிறப்பாய் இருக்கின்றன. படிகள் ஏறி கோயில் உள்ளே மகாமண்டபத்திற்குச் சென்றால் அங்கு சலவைக் கல்'நந்தி ஒன்று மூலஸ்தானத்தை நோக்கி படுத்திருக்கும். அதற்கு இருபக்கத்துச் சுவர்களில் அனுமாரும், மகாதேவர் பார்வதி வடிவங்களும் சலவைக்கல்லில் அமைத்து வைத். திருக்கின்றனர். இவர்களைத் தரிசித்த பின்னரே நாம் மண்டபத்தின் விதானத்திற்குள் வருகிறோம். விதானத்தைப் பதினாறு தூண்கள் தாங்கி நிற். கின்றன. அதன் பேரிலே தான் டோம் இருக்கிறது.