பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 செய்யும்போது, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று பெயரும் பெறுகிறது என்று அறிவோம். அப்படி மூன்று கூறாக முளைத்தெழுந்தாலும் எல்லாம் ஒன்றே என்னும் படி மூன்று முகம் கொண்ட மகேசனாக அவர் இருக்கிறார். இக்குடைவரையில் உள்ள சிற்பங்களில் சிதையாது இருக் கின்ற வடிவம் இது ஒன்றேதான். வான்கெட்டு, மாருதம் மாய்ந்து அனல் நீர் மண் கெடினும் தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன் அல்லவா அவன்! அதனால் தானோ என்னமோ, அவன் வடிவைக் கூட சிதைக்க இயலாது போயிருக்கிறது வெறியர்களுக்கு! இன்னும் குடைவரையில் சிவபார்வதி திருமணக்கோலம், அர்த்த நாரீஸ்வர வடிவம், கைலாசபதியின் வடிவம் எல்லாம் இருக்கும். எல்லாம் பத்துப் பன்னிரண்டு அடி அளவில் தான் என்றாலும் பல பகுதிகள் சிதைந்து போய்விட்டன. இப்படிச் சிதைந்திருக்கும் நிலையிலேயே இத்தனை அழகு என்றால் பூரணப் பொலிவோடு இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம்தானே! இக்குடைவரை நமது மாமல்லபுரத்துக் குடைவரைகள் உருவாகி ஒரு நூறு வருஷங்கள் கழிந்தபின், எட்டாம் நூற்றாண்டிலேதான்-உருவாகி இருக்க வேண்டும்-என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர். இப்படி பேலூர், பாதாமி, எலிபெண்டா முதலிய கலைக் கோயில்களை எல்லாம் பார்த்த பின்னரே இந்தியக் கலையின் சிறப்புக்கெல்லாம் முக்கிய காரணமாக இலங்கும் அஜந்தா எல்லோராக் குடைவரைகளைக் காணச் செல்ல வேண்டும். ஆம். முதலில் சிற்ப உலகில் சிறந்த இடம் பெற்றிருக்கும் எல்லோராவிற்கே செல் வோம். எல்லோரா ஒரு பெரிய குடைவரை. இங்கு இருப்பது ஒரு குடைவரை அல்ல. மொத்தம் முப்பத்தி நான்கு குடைவரைகள் இருக்கின்றன. இவற்றில் சரிபாதி-பதினேழு குடைவரை-இந்து சமயச் சார்பு உடையவை. பன்னிரண்டு பெளத்த மதச்சார்பும்,