பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சில படிகள் ஏறித்தான் அங்குள்ள குடைவரைகளுக்குச் குச் செல்லவேண்டும், அங்கு இருந்தவை பல குடைவரை கள் என்றும், இன்று இருப்பவை நான்கு குடைவரைகள் என்றும் கணக்குச் சொல்லுவர். ஆம், நாம் காண வேண்டியதெல்லாம் ஒரே ஒரு குடைவரையைத்தான். இக்குடைவரை 120 அடி சதுர அளவில் இருக்கிறது. குடை வரையைத் தாங்கி நிற்பது போல் பெரிய பெரிய துரண் களையுமே வெட்டிச் செதுக்கியிருக்கிறார்கள். இக்குடை வரை மூன்று பகுதியாக இருக்கும் வடக்கே பார்த்த பிரதான வாயிலை அடுத்துப் பெரிய மண்டபத்தோடு கூடிய பகுதி ஒன்று. அதற்கு வலப்புறமும் இடப்புறமும் இருக்கும் பகுதிகள் இரண்டு. மத்திய பிரதான மண்ட பத்தை இருபதுக்கு மேற்பட்ட தூண்கள் அலங்கரிக் கின்றன. - - - துரண்கள் எல்லாம் அடிப்பாகத்தில் சதுரமாகவும், மேல்பகுதி வட்டமாகவும், மேல்பகுதி வரிவரியாகவும் அதற்கு மேல் குடைவிரித்தாற்போல் போதிகைகளையும் தாங்கி நிற்கும். இக்குடைவரையில் பிரதான வாயிலுக்கு வடபுறம் உள்ள கற்சுவரில் பிரம்மாண்டமான தாண்டவ வடிவம் இருக்கும். அட்ட மூர்த்தியான சிவனை எட்டுத் திருக்கரங்களோடு ஆடும் பெருமானாகப் பத்தடி உயரத்தில் உருவாக்கி இருக்கின்றான் சிற் பி. ஆனால் அவனது கால் இரண்டையும்தான் இங்கு தங்கியிருந்த போர்த்துக்கீசிய வெறியர்கள் பூரணமாகச் சிதைத்து விட்டார்களே. இத்தாண்டவ வடிவத்திற்கு எதிர்த் திசையிலேதான் லகுலீசன் என்னும் சிவனது வடிவம். இந்தப் பிரதான குடைவரையில் நடுவில் ஒரு சிறு கோயிலை உருவாக்கி, அதில் ஒரு சிவலிங் கவடிவத்தையுமே நிர்மாணித்திருக்கிறார்கள் சிற்பிகள். இக்குடைவரையின் தென்கோடியிலேதான் தலைவாயிலுக்கு நேரே நடுநாயக மாக இருப்பவர்தான் மகேச மூர்த்தி. ஆம். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் ஒரே பரம்பொருள்தான் செய்து கொண்டிருக்கிறது. அப்படிச்