பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 யானவள் எவ வளவு காலமாக மற்றவர்களை மறந்து விடு. கிறாளோ அதுபோலவே வீரர்களையும் புறக்கணித்து வருகிறாள். ஆனால் மகான்கள் எப்போதும் காலதேவதை. யின் ஞாபகத்தில் ஸ்திரவாசம் செய்து கொண்டிருக்கிறார் கள். மகாத்மா காந்தியடிகளின் பெருமை அவர் நடத்திய தீவிரமான போராட்டங்களைக் காட்டிலும், அவருடைய பரிசுத்த வாழ்க்கையிலே தான் தங்கியிருக்கிறது. உலகத். தின் அழிவுச் சக்திகள் மேலும் மேலும் மோசமாகப்போய்க் கொண்டிருந்த தருணத்தில், ஆத்மாவுக்கு சிருஷ்டி சக்தி உண்டு, ஜீவசக்தியை அளிக்கும் தன்மையும் உண்டு என்று அவர் வற்புறுத்திப் பேசினாரே அதிலேதான் அவருடைய பெருமை இருக்கிறது.' இப்படி மகாத்மாவின் ஆன்மீக சக்தியைப் பாராட்டி யவர் வேறு யாருமில்லை, நமது ராஷ்டிரபதியாக விளங்கிய டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள்தான். அவ்வளவு பெருமைக்கும் புகழுக்கும் உரியவராய் இருந்த மகாத்மா காந்திஜியின் அவதாரத்தலம்தான் போர்பந்தர். நாம் நம் நாட்டில் பிறந்து வளர்ந்த பெரியவர்களை மாத்திரம் வழிபடுகிறதில்லை. அவர்கள் பிறந்த ஊரையும் புனித. மான தலமாக கருதி அங்கு சென்று வழிப்பட்டு வரு கிறோம். சம்பந்தர் பிறந்த ஊர் என்பதனால் சீர்காழிக் கும், அப்பர் பிறந்த ஊர் என்பதால் திருவாமூருக்கும் சுந்தரர் பிறந்த ஊர் என்பதால் திருநாவலூருக்கும், மணிவாசகர் பிறந்த ஊர் என்பதற்காக திருவாதவூருக்கும். சென்றிருக்கிறோம். இதைப் போலவே ஆழ்வார்கள் பிற்ந்த தலத்திற்கும் சென்று வந்திருக்கின்றோம். ஏன் சொல்லப் போனால் கம்பர் பிறந்த ஊராகிய திருவழுந்: துாருக்கும், ராமானுஜர் பிறந்த ஊராகிய பூரீ பெரும்புதுா ருக்குமே ஒரு நடை நடந்திருக்கிறோம். இப்படி நமது நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பிறந்த தலத்திற்கு எல்லாம் சென்று வந்த நாம், நமது வடநாட்டு யாத்திரையிலும் கண்ணன் பிறந்த ஊர் ராமன் பிறந்த