பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 கைக்கே சென்றிருக்கிறார். தன்னுடன் கொஞ்சம் அவலையும் எடுத்துச் சென்றிருக்கிறார். அந்த அவலையும் அவல் கொண்டு வந்த குசேலரையும் அன்புடன் ஏற்று உபசரித்து, அவர் செல்வத்தில் திளைக்க கண்ணன் அருள் புரிந்திருக்கிறான். இந்த சுதாமர் பிறந்து வாழ்ந்த இடம் ஆனதால் இதனை சுதாமபுரி என்று அழைத்திருக்கின்றனர். இதைப்பற்றி பகவத் கீதையே பேசுகிறது. இங்குள்ள பழமை யான கோயில் சுதாமர் கோயில்தான். அக்கோயிலில் கிருஷ்ணனையே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இக் கோயிலின் இடைவெளியில் 84 கோணங்கள் என்று ஒரு சிறுமேடை எழுப்பியிருக்கிறார்கள். சதுரமான ஒரு மைதானத்தில் 84 வளைவுகள் உள்ள சுவர் எழுப்பி மேடை அமைத்திருப்பதின் காரணமான இதனை 84 கோணங்கள் என்று அழைக்கின்றனர். இச்க்தாமர் கோயிலை விட இன்று பிரசித்திப் பெற். றிருப்பது, கீர்த்தி மந்திர் தான். காந்திஜி பிறந்த வீட்டுக்குப் பக்கத்திலே தான் இக் கோயிலைக் கட்டி இருக்கிறார்கள். அவரது புகழுக்கும் கீர்த்திக்கும் ஏற்ற வண்ணமே பெரிதாகக் கட்டியிருக்கிறார்கள். காந்தி யடிகள் பிறந்த அறையைக் காணும் போது நமக்கு உடம் பெல்லாம் புல்லரிக்கும். கீர்த்தி மந்திரில், கஸ்தூரிபாய், காந்திஜியின் படத்தை பெரிதாக எழுதி வைத்திருக் கிறார்கள். மேல் மாடியிலும் கீழே உள்ள அறைகளிலும் காந்திஜியின் பொன் மொழிகளை எல்லாம் சலவைக் கல்லில் பொறித்து வைத்திருக்கிறார்கள். காந்திஜியின் வாழ்வை விளக்கும் பலவகைப் படங்களும் இருக்கின்றன. நூல் நிலையம் ஒன்றும் அமைத்திருக்கிறார்கள். காந்திஜி" சிறுவனாக இருந்த போது உபயோகித்த பொருட்களே எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். சிறுவனாக இருந்தபோது அவர் உபயோகித்த செருப்பு, பெட்டி, துண்டு, காகிதங்கள் சில்லறைச்சாமான்கள் எல்லாம் இன்று அரிய கண்காட்சிப் பொருட்களாக அங்கே இருக்,