பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 செய்பவர்கள் என்று தான் பொருள். இங்குள்ள வணிகர்கள் பெரும்பாலோருக்கு ஆப்பிரிக்கா கண்டத் துடன் தான் வியாபாரம் அதிகம். ஆப்பிரிக்கா நாட்டுடன் ஏற்றுமதி இறக்குமதி செய்வதால் வியாபாரம் செழிப்பாக இருக்கிறது. இந்நகர் பிரமுகர்கள் பலர் ஆப்பிரிக்கா கண்டத்திலேயே நிரந்தரமாகக் குடியேறி இருக்கிறார் களாம். வியாபாரத் தொழில் நிலையங்கள் நிறுவி அங்கேயே வாழ்ந்து வருகிறார்களாம். நமக்கும் தெரியுமே, காந்திஜி பாரிஸ்டர் பட்டம் பெற்றதும் ஆப்பிரிக்கா நாட்டிற்குத்தானே சென்றிருக்கிறார். அங்குதானே அவரது அரசியல் வாழ்விற்கு வித்திடப்பட்டிருக்கிறது. இப் போது கூட ஆப்பிரிக்காவிற்கு கப்பல் மார்க்கமாகச் செல் கிறவர்கள் இப்போர்பந்தர் துறைமுக வழியாகத்தான் செல்கிறார்களாம். நாம் எல்லாம் வியாபாரிகள் அல்லவே. நமக்கு எதற்கு இந்தச் சங்கதியெல்லாம். நாம் வந்தது ஒவ்வாரு தலத்திலும் உள்ள கோயில்களைக் காணத்தானே என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. அது எனக்கும் ஞாபகம் இருக்கிறது. ஆதலால் விறு விறு என்று அங்குள்ள கோயில்களைக் காணப் புறப்படலாம், இந்த போர்பந்தர் ஆதியில் சுதாமபுரி என்றுதான் பேர் பெற்றிருந்தது. சுதாமர் என்பவர் யார் என்று பலருக்குத் தெரிந்திராது. ஆம் அவரைத்தான் குசேலர் என்று நாம் அழைத்து வந்திருக்கின்றோம். அவர் கதையை குசேலோ பாக்கியானம் என்ற பெயரில் வல்லூர் தேவராஜபிள்ளை பாடல்களாகவும் பாடிவைத்திருக்கிறாரோ. குசேலர் கதை நமக்குத் தெரியும். சின்னப் பையனாக இருக்கும்போது கண்ணனோடு ஒரு சாலை மாணாக்கனாக இருந்திருக் கிறார். பின்னர் தன்மனைவி சுசீலையுடன் இல்லறம் நடத்தி இருபத்துஏழு பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார். அதன்பின் வறுமையில் வாடியிருக்கிறார். பின்னர் தன் மனைவியின் ஆலோசனைப்படிக்கண்ணனைக் காணத் துவார