பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. உதயபுரி ஜகதீசர் பாரசீகக் கவிஞரான ஓமர்கய்யாம் என்பவரிடம் சுவர்க்கம் எங்கே என்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறான் ஒருவன். அதற்கு அவர் சுவர்க்கம் ஏதோ வானுலகத்தில் தான் இருக்கிறது என்று இல்லை இங்கே இந்த உலகிலேயே இருக்கிறது. ஒரு ரமணியமான தோப்பு, அங்கு உண்ட தற்கு ஒரு ரொட்டித் துண்டு, குடிப்பதற்கு கொஞ்சம் மது, படிப்பதற்கு ஒரு கவிதைப் புத்தகம், பக்கத்தில் இருந்து இன்னிசை எழுப்ப ஒரு காதலி மட்டும் அமைந்து விட்டால், அதுவே சொர்க்கம்தானே? என்று பதில் கூறி இருக்கிறார், அவர், அவர் சொன்னதை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து ஒரு நல்ல பாடலாக நமக்கு அளிக்கிறார். - வெய்யிற்கேற்ற கிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவி உண்டு கலசம் கிறைய அமுதுண்டு தெய்வகீதம் பல உண்டு தெரிந்து பாட யுேம் உண்டு வையந்தனில் இவ்வனம் அன்றி வாழும் சொர்க்கம் வேறுளதோ? என்பது பாடல். ஆம் தன்பக்கத்தில் இருக்கும் காதலியைப் பார்த்தே பாடுகிருன் கவிஞன். இப்படிப்பட்ட கற்பனை சுவர்க்கத்தைக் காணவேண்டும் என்றால், ராஜஸ்தானத் தில் உள்ள உதயபுரிக்கே செல்ல வேண்டும் என்பேன் நான். அதிலும் எழில் நிறைந்த அந்த நகரத்தில் பிச்சோலா ஏரி யில் மிதக்கும் படகுகளில் ஒன்றில்மட்டும் ஒரு காதலியுடன் அமர்ந்து செல்லும் அனுபவம் ஏற்பட்டு விட்டால்