பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 கணக்கிட்டிருக்கிறார்கள். கோட்டை மதில் சுவர் 8 மைல் சுற்றளவுடன் இருக்கிறது. கோட்டையைச் சுற்றிக் காடுகளும் கோட்டைக்குள் பல பல அரண்மனைகளும் ஏரிகளும், கோயில்களும் சிகரங்களும் உண்டு. அவைகளில் பல பாழடைந்தே கிடக்கின்றன. கோட்டைக்கு வளைந்து வளைந்து செல்லும் பாதை உண்டு. மலையடிவாரத் திலிருந்து ஒரு மைல் வளைந்து வளைந்து சென்றால்தான் கோட்டையை அடையலாம். கோட்டைக்கு ஏழு வாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் கம்பீரமாய் உயர்ந்திருக்கிறது. செல்லும் வழியில் உள்ள முதல் வாயிலை பாதல்போம் என்கின்றனர். அங்குதான் மகாராணா மிகுல் என்பவரின் பேரன் பரக்சிங் என்பவர் 1535-ல் குஜராத்தின் சுல்தான் பஹதூர் ஷா முற்றுகை இட்டபோது கொல்லப்பட்டார் என்று குறித்திருக் கிறார்கள். இப்படியே ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு வீரராஜபுத்திரனது மரணத்தின் ஞாபகச் சின்னமாகவே இருக்கிறது. கோட்டையில் பிரதான வாயிலான ராம்போல் சிறந்த வேலைப்பாடுடையது. முழுவதும் நன்கு செதுக்கிய கற்கள் கொண்டு கட்டப்பட்டது. இந்த வாயிலைக் கடந்து கோட்டைக்குள் நுழையுமுன், இந்த கோட்டையின் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். இக்கோட்டையை ஏழாம் நூற்றாண்டில் மோரிராஜபுத்திரர்கள் தலைவனான சித்ராங்கதன் கட்டி விருக்கிறான். அதனைச் சித்ரகூடம் என்றே அழைத்திருக் கிறான். அந்தப் பெயரே சித்துார் என்று குறுகி வழங்கி வந்திருக்கிறது. இந்தக் கோட்டையிலிருந்தே சிஸோதயா ராஜபுத்திரர்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்திருக்கிறார்கள். அதன்பின் ராணா உதயசிங் உதயப்பூரை உருவாக்கி, தன் தலைநகராக அதனை ஆக்கியிருக்கிறான். சித்துார் கோட்டையிலிருந்து அரசாண்ட பெருமக்களுள் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களே மகாரானா