பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 1032-ஆம் ஆண்டு, பதினெட்டுக் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது என்று எழுதி வைத்திருக்கிறது. ஆம். அத்தனை கோடி ரூபாய் பெறும் என்று கோயிலுள் சென்று கண்டால் நமக்கும் தோன்றும். கோயில் முழுவதும் ஒரே சலவைக்கல் மயம். சுவர், தூண், விதானம், தளம் எல்லாமே சலவைக்கல்லால் ஆனதுதான். சலவைக்கல்லை கல் என்று எண்ணாமல் ஏதோ மெழுகு என்று நினைத்தே நுண்ணிய வேலைகள் எல்லாம் செய்திருக்கிறார்கள்சிற்பிகள். கோயிலின் உட்புறத்தில் ஒரு சுற்றுமண்டபம். அதன் நீளம் 140 அடி. அகலம் 96 அடி. அந்த மண்ட பத்தைத் தாங்கி நிற்பவை எல்லாம் சிறந்த சிற்ப வேலைப் பாடுடைய சலவைக்கல் துரண்கள். அத்துTண்களை இனைத்து நிற்கும் தோரணங்கள் வேறே. இந்த மண்ட பத்தைச் சுற்றியே 52 தீர்த்தாங்கரர்களின் வடிவங்கள். அங்கும் விதானம், சுவர், துரண் தளம் எல்லாம் சலவைக் கல்தான். தீர்த்தங்கரர் எல்லாம் ஒரே அச்சில் வார்க்கப் பட்டவர்கள் போலவே இருப்பார்கள். மூலக்கோயில் முன்பு நாற்பது துரண்கள் தாங்கி நிற்கும் மண்டபம் ஒன்று. அதன் மத்திய பாகத்தை எட்டுத்துரண்கள் அலங்கரிக் கின்றன. அத்துரண்கள் தாங்கி நிற்கும் விதானத்திலிருந்து தாமரைகள், லஸ்தர் குளோபுகள் தொங்கும். எல்லாம் சலவைக் கல்லால் செய்யப்பட்டவை என்றால் நம்புவது கடினம் தஞ்சை ஜில்லாவில் தென்னங்கிடுகுகளை வைத்து அலங்காரந் பந்தல் போடுவர். அதில் தங்கள் கைத்திறனை எல்லாம் காட்டுவர் கலைஞர்கள், அக்கலைஞர்களின் முதுகுக்கு மண் காட்டுவதுபோல சலவைக் கல்லில் விதா னம் அமைத்திருக்கிறார்கள்-சிற்பிகள். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஒரு சலவைக்கல் கனவு என்றால் இது ஒரு சலவைக்கல் நனவாகவே அமைந்திருக்கிறது. இதை அடுத்த கோயில்தான் லூன. வாசிகி என்னும் நேமிநாதர் கோயில். அங்கு கோயில் கொண்டிருப்பவர் 22-வது தீர்த்தங்காரர். அக்கோயில் 1281-ல் பன்னிரண்டு கோடி ரூபாயில் கட்டப் பட்டிருக்கின்றது. இக்கோயிலும் முழுக்கமுழுக்கச் சலவைக்