பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கல்லால் கட்டப்பட்டதே. இதுவும் ஏறக்குறைய விமலாகதி கோயில் போலத்தான். என்றாலும் இங்குள்ள தோரண வாயில்கள் இன்னும் சிறப்பானவையாக இருக்கின்றன. இப்படி இரண்டு அற்புதக் கோயில்களை அந்த ஆபூமலை தன்னுள் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கிறது. பெற வேண்டிய பிரசித்தியை அவைகள் பெறவில்லை. கலைக் கோயில்களைப் பார்த்தபின் தாஜ்மகால் எல்லாம் இதன் காலில் கட்டி அடிக்கக் காணாது என்றே தோன்றும் முத்து, மணி, மாணிக்கம், வைரம், பவளத்தின் முழுச் சோதியோடு கூடிய அதிசயக் கோயில்களாக அவை விளங்குகின்றன. இன்னும் உங்களைப் பல இடங்களுக்கு இழுத்துது செல்ல விரும்பவில்லை. என்றாலும், மத்தியப் பிரதேசத்தி லுள்ள கஜூரஹோ கோயில்களுக்கும், புவனேஸ்வரத்தின் கோயில்களுக்கும் அழைத்துச் செல்லாவிட்டால் இக்கலைக் கோயில் யாத்திரை பூரணத்துவம் பெற்றதாகவும் ஆகாது. கஜுராஹோ செல்லும் வழி கரடு முரடுதான். ஆக்ராவி லிருந்து குவாலியர் போய் அங்கிருந்து ஜான்சி சென்று. அதன்பின் ஹர்பால்பூர் வழியாகச் செல்ல வேண்டும். போகிற வழியில் உள்ள ஆறுகளுக்குப் பாலம் கிடையாது. தங்க வசதியிருக்காது. ரயிலில் சென்றாலும் . ஹர்பால் பூரில் இறங்கி அங்கிருந்து முப்பது மைல் டாக்சி வைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். ஆனால் டில்லியி லிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வானத்தில் பறந்து சென்று திரும்ப வசதி செய்திருக்கிறார்கள். ஆளுக்கு ரூ. 100-கட்டணம் என்பார்கள். பரவாயில்லை அதுவே எளிதான வழி; இல்லை என்றால் நேரே அலகாபாத் போய், அங்கிருந்து ரெய்ப்பூர் வழியாகச் சுற்றிக் கொண்டு முன்னுாறு மைல் போனாலும் கஜுராஹோ போய்ச் சேரலாம். அங்குள்ள கோயில்கள் அன்று நூற்றுக்கு மேல் இருந்தனவாம். இன்று இருப்பவை எல்லாம் பத்துப் பன்னிரண்டு கோயில்களே. இந்தோ