பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 சங்கா என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில்தான் மேவார் ராஜ்யம் பெரும் புகழ் எய்தியது. பதினெட்டுப் போர்களங்களில் வெற்றி கண்டவீரன் என்று இவன் புகழ். பேசப்படுகிறது. இந்த வீரனுமே 1527.ல் மொகலாய மன்னர் பாபரால் முறியடிக்கப்படுகிறான். அதனால் மனம் உடைந்து சாகிறான். இன்னும் சில வருஷங்களில், இங்கி ருந்து ஆண்ட விக்ரமாதித்யன் என்பவனும் குஜராத். சுல்தான் பஹதுரர் ஷாவினால் முறியடிக்கப்படுகிறான். இந்தப் படையெடுப்பில் ராஜபுத்திரப் படைகளை மன்ன னது தாயாரான ஜவஹிர்பாய் என்பவளே முன்னின்று நடத்தியிருக்கிறாள். இப்போர் முடிய முன்னேயே ராணா சங்காவின் மனைவியான ராணி கர்ணாவதி தேவியும் மற்றவர்களும் தீக்குளித்து ஜெளஹர் நடத்திவிடுகின்றனர். ஆம் ராஜபுத்திரப் பெண்மணிகள் தீக்குளிப்பதையே ஜெளஹர்' என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன. . மொகலாய மன்னன் அக்பர் காலத்தில்தரன் 1587-ன் சித்துனர் கோட்டை கடைசியாக முற்றுகை, இடப்படுகிறது. இப்போரில்தான் ராஜபுத்திர மன்னர்களால் ஜெய் மாலும், பத்தாவும் வீரமரணம் எய்துகின்றனர். பெண்மணிகளும் ஜெஹெர் நடத்தி விடுகின்றனர். ஜெய்மால், பட்டா என்னும் இரண்டு வீரர்களின் வீரத்தை மெச்சி அவர்களது வடிவைச் சிலைகளாக வடித்து ஆக்ராவிலே தன்னுடைய கோட்டை வாயில் யானைகளின் மேல் ஏற்றிவைத்து அக்பர் கெளரவித்திருக்கிறார். இதன் பி ன் தா ன் மகாராணா பிரதாப் அரியணை ஏறி அக்பரோடு பல தடவை போரிட்டிருக்கிறார். கடைசியில் தன் அருமந்த குதிரை சட்டாக்குடன் ஒடி காடுகளில் இருந்து அக்பருக்கு ஓயாத தொல்லை கொடுத் திருக்கிறான். மகாரானா பிரதாப்பின் வீரத்தை தாட் முதலிய ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்கள். இக்கோட்டைக்குள் நாம் காணவேண்டிய நிறைவுச் சின்னங்கள் இரண்டு, ஒன்று கீர்த்தி ஸ்தம்பம், மற்றொன்று