பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 மாதா காளி கோயிலாக மாறி இருக்கும், கோயில் ஒன்றும் உண்டு. இதுவும் பழைய கோயில்தான். எட்டாம் நூற்றாண்டிலேயே கட்டப் பெற்றிருக்கின்றன. இக் கோயில் இன்று இடிந்து கிடந்தாலும் அங்குள்ள பிரதக்கன பாதையிலும், மண்டபத்திலும் உள்ள சிற்ப வடிவங்கள் அழியாப் புகழுடையனவாக இருக்கின்றன. ஜய ஸ்தம்பம் பக்கத்தில் கும்பஸ்யாம் என்று கோயில் இருக்கிறது. அங்குள்ள மூல மூர்த்தி வராகர், இதனை ராணா கும்பா 1448-ல் கட்டியிருக்கிறார். இக்கோயில் வாயிலில் ஒரு பெரிய கருடனது சிலை வேறு இருக்கிறது. இக்கோயிலில் பக்கத்திலேதான் மீராபாய் வணங்கிய கண்ணன் கோயில் இருக்கிறது. உயர்ந்த சிகரத்தோடு கடிய பெரிய கோயில் அது. இங்கு ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அதைத் தாங்கி நிற்கும் தூண்கள் எல்லாம் சிறந்த வேலைப்பாடு உடையவை. கருவறையை சுற்றி ஒரு பிரதக்கூடின பாதை. இக்கோயிலின் பக்கத்திலேயே மீராவின் சரித்திரத்தோடு ஒட்டிய வேறு ஒரு சிறிய கோயிலும் இருக்கிறது. மீராவின் கதை நமக்குத் தெரியும், ராவ்ரத்தன் இங்கின் மகளாய் பிறந்து குன்வர் போஜராஜனை மணக் கிறாள். இந்த போஜராஜன்தான் மகாராணா சங்காரம் சிங்கின் மூத்தமகன். ஆனால் மீரா இளமையிலேயே நீலநிறத்துப் பாலகனான கண்ணனிடம் உள்ளம் பறிக் கொடுத்து நின்றிருக்கிறாள். ஆதலால் தன் கணவருடன் அதிகம் ஒட்டவில்லை. கடைசியில் கண்ணனையே காதலனாக அடைகிறாள். துவாரகை சென்று அவன் திருவடிகளில் கலந்தும் விடுகிறாள். மீரா பாடிய பஜன் பாடல்கள் எல்லாம் இந்த கோபாலனைப் பற்றிய பாடல் களாகவே இருக்கும். அவை வடநாட்டில் பிரசித்த மானவை. மீராவின் பாடல்கள் சிலவற்றை தமிழில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களும் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார்கள்.