பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

355 மகாகாலர் கோயிலைவிட்டு வெளியேவந்து மேல வீதிக்குச் சென்றால் அங்கு ஒரு விநாயகர் கோயில், மதுரை முக்குறுணிப் பிள்ளையாரைப்போல, பெரியதொரு வடிவிலே பிள்ளையாரை சுதையிலே அமைத்து, வண்ணங் களை எல்லாம் பூசி இருக்கிறார்கள். இக்கோயிலில் சுண்டெலிகள் பல அங்குமிங்கும் ஒடிக்கொண்டேயிருக் கின்றன. மகாகாலரையும் அவரது சீமந்த புத்திரன் விநாயகரையும் வணங்கிய பின்னர், நம் உள்ளத்தின் அடித் தளத்தில் ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். ஆமாம், அந்த விக்கிரமாதித்த மகாராஜனுக்கு அருள் புரிந்த காளி கோவில் இன்று இங்கு இல்லாமல் இருக்குமா என்று எண்ணுவோம். அந்தக் காளியை ஹரசித்தி தேவி என்று அழைக்கின்றனர். அக்கோயில் மகாகாலர் கோயி லுக்கு தென்மேற்கே ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. ஒரு தாள். சிவபெருமானும் காளிதேவியும் உடன் இருந்து உல்லாசமாக சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது நந்தி பெம்மான் வாயில் காவலனாக இருந் திருக்கிறார். சண்டன், பிரசண்டன் என்ற இரண்டு அசுரர் கள் இங்கு வந்து நந்தியைத் தாக்கி சிவபெருமானும் காளி யும் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்திற்கு இடையூறு செய் திருக்கின்றனர், சிவபெருமான் வேண்டிக்கொண்டபடி காளியே அவ்வரக்கர்களை வதம் செய்திருக்கிறாள். ஹரனுடைய ஏவலால் அரக்கனை வதம் செய்த சித்தியை ஹரசித்தி என்றே அழைத்திருக்கின்றனர். இந்த ஹரசித்தி தான் விக்ரமாதித்தனது வழிபடு தெய்வம். அவனுக்கு எல்லா சக்திகளையும் அருளியவள். இக்கோயில் வாயிலில் இரண்டு தீப ஸ்தம்பங்கள் இருக்கின்றன. கோயில் பிரகா ரத்தில் சித்தவடம் என்னும் ஆலமரம் ஒன்றும் இருக் கின்றது. பல ஆண்டுகளாக அம்மரம் அங்கேயே இருக் கின்றது என்கின்றனர். கோயிலுக்குச் செல்லும் மக்கள் அதனையும் வந்தித்து வணங்குகின்றனர். ஹரசித்திதேவி பயங்கர வடிவினள். ஆதலால் எட்டியிருந்தே வணக்கம் செலுத்திவிட்டுத் திரும்பி விடலாம். இக்கோயிலுக்கும்