பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 மேற்கே மூன்றுமைல் தூரத்தில் கடிகிகால்காதேவி கோயில் இருக்கிறது. அங்கிருந்துதான் விக்ரமாதித்தன் நீதி வழங்கு வானாம். இந்த உஜ்ஜயி னியை கிருஷ்ணபரமாத்மாவின் வரலாற்றோடு தொடர்பு படுத்தி ஒரு கதையும் இங்கு வழங்குகின்றது. கிருஷ்ணன், பலராமன் சுதாமர் மூவரும் சாந்திப முனிவரிடம் குருகுலவாசம் செய்திருக்கின்றனர். அந்த சாந்தீப முனிவரின் ஆசிரமம் இந்த உஜ்ஜயினில் தான் இருந்திருக்கிறது. கிருஷ்ணன் குருகுலவாசம் வருவதற்கு முன்னரே சாந்திட முனிவரின் குமாரன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போயிருக்கிருன். பஞ்சனன் என்ற அசுரனே அவனைக்கொண்டு சென்றிருக்கிறான். இப்படி சாந்தீப முனிவரின் மகன் இறந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கின்றன. கிருஷ்ணன் தன் குருகுலவாசம் முடிந்து தன் ஊர்திரும்பும் போது என்ன குருதட்சினை வழங்குவது என்று எண்ணியிருக்கிறான். முனிவர் தன் பையனையே கொணர்ந்து கொடுக்கும்படி வேண்டியிருக்கிறார். அவர் விரும்பியபடியே கிருஷ்ணன் கடலுள் புகுந்து பஞ்சனன் என்ற அசுரனைக்கொன்று அவனையே ஒரு சங்காக்கி அச்சங்கால் வெற்றியை ஊதிக்கொண்டே திரும்பி முனிவர் மகனைக் கொணர்ந்திருக்கிறான். அப்படி பஞ்சனனையே சங்காகக் கொண்டதன் காரணமாகவே பாஞ்சஜன்யம் என்னும் சங்கும் என்றும் நிரந்தரமாய் கிருஷ்ணன் கையில் இலங்குவதாயிற்று. இந்த வரலாற்றையே திருமங்கை மன்னன் பெரிய திருமொழியில் ஏழை ஏதலன்' என்று துவங்கும் பாசுரத்தில்பாடி அரங்கத்து அரவணையானைத் துதித்திருக்கிறார். - ஒது வாய்மையும் உவனிய பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் காதல் என் மகன் புகலிடம்காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று