பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.81 கிறது. அரண்மனையில் காணவேண்டிய மற்றொரு இடம் சந்திரமஹால். அது ஒரு ஏழுமாடிக் கட்டிடம். அதன் மேல் மாடியில் ஏறி நின்றால், ந்கர் முழுவதையுமே ஒரு நோட்டம் விடலாம். அரண்மனையை விட்டு வெளியே வந்ததும், நாம் காணவேண்டியது ஜந்தர் மந்திர் என்னும் வான ஆராய்ச்சி நிலையம். அதனை யந்த்ரம் என அழைக் கின்றனர் பொதுமக்கள். வான ஆராய்ச்சியில் மிகவும் சடுபட்டிருந்த மன்னர் ஜெய்சிங் இதனைக் கட்டியிருக் கிறார். காலத்தை அளக்கும் கருவிகள், சூரிய சந்திரன் முதலிய கிரஹங்களை கணக்கிடும் முறை எல்லாம் கட்டிடங்கள் மூலமாகவே இங்கு தெரிவிக்கப்படுகிறது. டில்லி, மந்த்ரா, உஜ்ஜயினி” வாரணாசி முதலிய இடங் களிலும் இதைப்போல வான நிலைய ஆராய்ச்சி கூடங் களை ஜெய்சிங் மகாராஜாவே நிர்மானித்திருக்கிறார். அரண்மனைச் சுற்றுப் புறத்திலேயே இன்னும் இரண்டு கட்டிடங்கள், ஒன்று சீஷ் மஹால் மற்றொன்று ஹவாய் மஹால், சீஷ்மஹால் முழுவதும் சிறு சிறு கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள பிரதான அறையில் நின்றுகொண்டு கதவுகளை அடைத்துவிட்டு, ஒரேயொரு நெருப்புக் குச்சியை மட்டும் கிழித்துப் பார்த்தால் அறை முழுதும் ஜகஜ்ஜோதியாம் ஒரே நட்சத்திர மண்டலம் போல் காணும். பெரிய வீதியை ஒட்டியிருக்கும் ஹவாய் மஹால் ஒரு பெரிய கட்டிடம். ஒற்றைச்சுவரை அழகாக அடுக்கடுக்காய்க் கட்டி அதில் உள்ள சிறு சிறு துவாரங்கள் மூலம் காற்று அரண்மனைப் பகுதிக்கு வந்து அந்தப் பகுதி யையே குளு குளு என்று வைத்திருக்கும் என்கிறார்கள். மனிதன் அறிவினால் சாதித்த ஓர் அற்புத சாதனை. ஜெய்ப்பூர் நகரத்தை ஒட்டிய பிரதேசங்களில் நாம் காண வேண்டியது இன்னும் இரண்டு இடங்கள். ஒன்று கெய்த்தோ என்றும் அரசர்களின் சமாதிகள் இருக்கும் இடம். ம ற் .ெ ற | ன் று. காலவமகரிஷி இருந்து பூஜித்த கால்டா என்பது, கெய்த்தோ ஊருக்கு வெளிப்