பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 என்பதிலிருந்தே அந்தப் பிரதேசத்தின் பழம்பெருமையை ஒருவாறு ஊகிக்கலாம் அல்லவா. சரி இந்த இந்திரப் பிரஸ்தம் எப்போது டில்லியாக மாறியது என்றும் அறுதி யிட்டுச் சொல்ல முடியவில்லை. தில்லி என்று வார்த்தைக்கு மனத்துக்கு இன்பம் அளிக்கும் இடம் என்று பொருளாம். பாண்டவர்கள் இருந்த இடம் என்று கேட்கும்போதே தமது மனம் குதூகலத்தால் துள்ளுகிறதே. ஆதலால் தில்லி என்ற பெயர் பொருத்தம்தான் என்று எண்ணுவோம். அந்தத் தில்லியே இன்று டில்லி என்று ஆங்கிலேயர் நாவில் தவழ்ந்து நம்மிடையேயும் வலுப்பெற்று நிற்கிறது. இந்த் டில்லியைக் காணவே நாம் இன்று இங்கு வந்திருக் கின்றோம். டில்லிசலோ! என்று உங்களையெல்லாம். டில்லி நோக்கி ஆற்றுப்படுத்துகின்றேன் நானும். - சென்னைக்கு வழிவாயிலே என்பர் நம் தமிழர், டில்லிக்கு வழி செல்லும் சிரமம் எனக்கு இல்லை. சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்வில் ஏறினால் கிட்டதட்ட 2200 கிலோ மீட்டர்களை 45 மணி நேரத்தில் கடந்து நேரே டில்லி நகர் சென்று சேரலாம். இப்படியே பம்பாயிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும் டில்லி நோக்கி ரயில்கள் ஓடிய வண்ணமாகவே இருக்கின்றன. இன்னும் விரைவாகவே டில்லி செல்ல வேண்டும். என்றால் எல்லா ராஜ்யத்தின் தலைநகரிலிருந்தும்விமானம் மூலம் பறந்து வந்து சேரலாம், இத்தனை சிரமமும் இல் லாமல் நீங்களே மனோ வேகத்திலேயே நினைத்த மாத்திரத்தில், என்னோடு டில்லி வந்து சேர்ந்து விடு கிறீர்கள். டில்லியை அதே மனோ வேகத்தில் சுற்றி விட முடியாது தான். கொஞ்சம் ஆற அமர இருந்தே காண வேண்டும். குறைந்தது இரண்டு நாள் அவகாசமாவது வைத்துக் கொண்டு சுற்றுவோம். ஒரு நாளை பழைய டில்லிக்கு என்று ஒதுக்குவோம், மறு நாளை புதிய டில்லிக்கு என்று ஒதுக்குவோம். நாமோ பழம் பெருமை பாராட்டுகிறவர்கள். ஆதலால் முதலில் பழைய .டில்லியையே சுற்றி வருவோம்.