பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403 இந்தியாவை நோக்கி ஓடி வந்தனர். இந்த அகதிகளுக்கு. வாழ இடம் கொடுக்க வேண்டியிருந்தது. அத்தோடு பஞ்சாபில் பழைய தலை நகரான லாகூர் பாகிஸ்தானுக்கு போய் விட்டதன் காரணமாக இந்தியாவுடன் இணைந்து நின்ற பஞ்சாப் பகுதிக்கு ஒரு தலை நகரை நிர்மாணிக்க வேண்டிய அவசியமும் இருந்தது. அப்போது தான் இப் பொழுது சண்டிகர் என்னும் தலைநகர் அமைந்திருக்கும் இடத்தை, ஆம் 15 சதுர மைல் பிரதேசத்தை தேர்ந்து எடுத்தனர் அரசாங்கத்தார். சண்டிகரை அடுத்த ரூபர் என்னும் இடத்தில் புதைபொருள் ஆராய்ச்சி நடத்திய போது அந்த மகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களைப் போல் ஒரு பெரிய நகரமே புதைந்து போயிருக்கிறது என்றும் தெரிந்தது. ஆம் ஐயாயிரம் வருஷங்களுக் முன் சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடத்தில் இந்த சண்டிகர் நகரம் என்னும் புதிய தலைநகரம் நிர்மாணிக்கப்பட்டது என்றால் அது சரித்திரப் பிரசித்தி உடையது தானே! இந்தப் பிரதேசத்திற்கு சண்டிகர் என்று பெயர் அமைப் பானேன் என்று தானே கேட்கிறீர்கள். ஆம், வடநாட்டின்: பிரதான தேவதை காளி என்பதை அறிவோம். காளி கட்டம் தானே இன்றைய கல்கத்தா. இந்தக் காளியையே சாமுண்டி, சண்டி சியாமளா என்ற பல பெயரில் வழி பட்டு வந்திருக்கிறார்கள். சண்டிகரை அடுத்த ஒரு சிறு மலைத் தொடரில் சண்டி தேவிக்கு ஒரு கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் மக்கள். அந்த சண்டிதேவியின் அருள்நிழலில் அமைக்கப்பட்ட நகரம் ஆனதால் சண்டிகர்’ என்ற பெயரோடு அந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டிருக். கிறது. - சண்டிகர் சென்றதும் நாம் முதலில் அதிசயித்து நிற்பது அதன் அகலமான வீதிகளைப் பார்த்தே. அந்த நகரில் ஏழு விதமான வீதிகள் இருக்கின்றன. இதில் சிறப் பானது விரைவாகச் செல்லும் கார்களுக்கு என்று மைக்கப்பட்டிருக்கும் பெரிய வீதிகளே. இந்தப்