பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 அங்கு ஒரு சுவாமிஜி இருக்கிறார். அவரையே சத்தி யானந்த சரஸ்வதி கீததாயி என்று மக்கள் போற்றி வணங்குகின்றனர். அங்கு ஒவ்வொரு வருஷமும் மகாமகத் தில் கீதாஜயந்தி உத்சவம் நடக்கிறதாம். பதினெட்டு நாட்கள் நடக்கும் இந்த உத்சவத்திற்கு நாட்டின் பலபாகங். களில் இருந்தும் மக்கள் வந்து கூடுகின்றனர். தானேஷ்வர், ஜோதிசரஸ் மாத்திரம்தான் குருrேத் திரம் என்றில்லை இந்த வட்டாரத்தில் இன்னும் பல மைல்கள் விஸ்தீரணம் சேர்ந்ததே குருrேத்திரம் என்பர். இன்னும் இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் உண்டு. பிரித்வி ஈஸ்வரர் மகாதேவ் கோயில் பிரபலமானது. ஆதியில் இதை பிருகு மகாராஜா கட்டினார் என்றும் பின்னர் அதனை முஸ்லீம்கள் இடித்து விட்டனர் என்றும், திரும் பவும் மராத்தியர்கள் கட்டிவைத்திருக்கிறார்கள் என்றும் பின்னர் அதனை முஸ்லீம்கள் இடித்து விட்டனர் என்றும், திரும்பவும் மராத்தியர்கள் கட்டிவைத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். சரஸ்வதி நதிக்கரையிலே சரஸ்வதி தேவிக்கும் ஒரு சிறு கோயில் இருக்கிறது. கார்த்திகேயனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது இந்த கார்த்திகேயன் நம்நாட்டு முருகனே என்றாலும், இந்த வட்டாரத்தில் எல்லாம் பிரம்மச்சாரியாகவே நிற்கிறான். ஆதலால். இங்கு பெண்களை அந்தக்கோயிலுக்குள் அனு. மதிப்பதில்லை. அங்கு வரும் யாத்திரீகர்கள் சிந்துர்த்தை நிவேதித்து அணிந்து கொள்கின்றனர். இந்தக் கோயில் களோடு சதுர்முகமகாதேவர் கோயில் என்றும் ஒரு கோயில் இருக்கிறது. அங்குள்ள சிவலிங்கம் நான்கு முகங் களோடு கூடியதாயிருக்கிறது. r இன்னும் இந்தக் குருக்ஷேத்திரப் பகுதியில் எண்ணிறந்த தீர்த்தக்கட்டங்கள் இருக்கின்றன. நாமோ பிரம்ம சரஸ்ஸிலும், ஜோதி சரஸ்ஸிலும் மூழ்கி புண்ணியத்தை முன்னமேயே ஏராளமாக சம்பாதித்துக்கொண்டோம். ஆதலால் ஒவ்வொரு தீர்த்தக் கட்டத்திலும் மூழ்கி எழுந்து