பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

431 அமரநாத்திற்குமே இடையில் உள்ள வழி எல்லாம் முப்பது மைல் துாரமே. என்றாலும், மூன்று நான்கு இடங்களில் தங்கியே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. பால்காமி விருந்து செல்லும் வழி லிட்டாநாலா என்னும் ஆற்றை ஒட்டியே செல்கிறது. வழி எல்லாம் பைன் மரங்கள் ஊடே எல்லாம் வழி வளைந்தும் சுற்றியுமே செல்லும்,. இங்கெல் லாம் ஆறுகள் குதித்துக்கொண்டும், கொக்கரித்துக் கொண்டும் பாறைகளின் வழியே ஒடும். பால்காமிலிருந்து கூேடிநாக் நதிக்கரை வழியாகவே செல்கிறது. பாதை. ஒன்பது மைல் நடக்க ஒருநாள் ஆகிவிடும். ஆதல்ால் அன்றிரவு சந்தன் வாசி என்ற இடத்தில் தங்கி இரவை கழிக்க வேண்டும் வசதிகளை எல்லாம் காஷ்மீர் சர்க்கார் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எங்கு பார்த் தாலும் சோலைகளும் மலர் வனங்களுமாக இங்கே:இயற்கை அழகு கொஞ்சும் . மறுநாள் காலையில் செங்குத்தான மலைமீது ஏற வேண்டும். பாதை வளைந்து வளைந்து தான் செல்லும். ஒருவர் பின் ஒருவராகவே வழி நடக்கவேண்டும். வழி யெல்லாம் மலர்ச்செடிகள்தான். பறவைகள் கூட வாழ முடியாத குளிர். இப்படி எட்டு மைல் நடந்தபின் சேஷநாக் என்ற இடம் வந்து சேருவோம். அங்கு ஒருநாள் இரவைக் கழிக்கவேண்டும். அங்கு வெளஜான் என்ற பெயரோடு அழகான தடாகம் ஒன்று இருக்கிறது. மிக்க அ ழ க | ன இடம். இதையும் கடந்து மேல் செல்லும்போதுதான் முக்கால்மைல் தூரம் மலையுச்சியில் செங்குத்தாய் ஏற வேண்டும். அங்கு எல்லாம் குதிரையையோ டோலியோ வராது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கால்களாலேயே நடந்து கடக்கவேண்டும். திருப்பதிமலை ஏறுகிறபோது முழங்கால் முறிச்சான் பகுதியை எல்லாம் நாம் கடந்திருக் கிறோம். இங்கு ஏற்றம் முழுங்காலை மட்டும் முறிக்காது உடலையே முறித்து விடும். வழியெல்லாம் முட்புதர்கள்