பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 இந்த சப்தசரோவரத்தை அடுத்த இடத்திலேயே சப்த ரிஷிகள் ஆசிரம் என்னும் பெயரோடு ஒரு ஆசிரமும் அமைத்து வைத்திருக்கிறார்கள். அதை ஒட்டி சிவபெரு மான் கோயிலும் கட்டியிருக்கிறார்கள். இன்னும் கங்கை யிலிருந்து வடியும் கால்வாய்களைப் பிரிக்கும் ஹெட் வொர்க்ஸ் இங்குதான் கட்டப்பட்டிருக்கிறது. என்ன, கட்டங்களாகவே வர்ணித்துக் கொண்டிருக். கிறீரே. இங்கு கோயில்களே கிடையாதா என்றுதானே கேட்கிறீர்கள். ஹரித்துவார்' என்ற பெயரை பழைய புராணங்களில் காணோம். அப்போதெல்லாம் இதனை மாயாபுரி என்றுதானே வழங்கியிருக்கிறார்கள். அப்படி மாயாபுரி என்று வழங்கிய பெயருக்கேற்ப மாயாதேவியின் பெயரால் ஒரு கோயிலை கட்டி இருக்கின்றனர். இன்னும் ஹரித்துவார் அடுத்திருக்கும் நீலபருவதம் என்னும் இடத். தில் சண்டிதேவிக்கு ஏழு கோயில்கள் இருக்கின்றன. இது ஹரிகிபைரியிலிருந்து நாலுமைல் தூரத்தில் இருக்கிறது. அதிகாலையிலேயே புறப்பட்டால்தான் மலை ஏறச் சவுகரி யமாக இருக்கும். அத்துடன் அங்கு செல்லும் யாத்ரீகர்கள் குடிப்பதற்குத் தண்ணிர் கூடவே எடுத்துச் செல்ல வேண் டும். மலையில் குடிப்பதற்குத் தண்ணிர் கிடையாது. ஹர்த்துவாருக்கு வடபுறம் நீண்டு உயர்ந்திருக்கும். சிவலிக் மலையில் மானசாதேவிக்கு ஒரு கோயில் இருக் கிறது. மானசாதேவி என்பவள் சிவபெருமானின் மகள் என்கின்றனர். நமது புராணங்களில் இப்படி ஒரு மகள் சிவ பெருமானுக்கு உண்டு என்றும் அவளை மானசாதேவி என்று அழைத்தார்கள் என்றும் நாம் படித்ததில்லை. அந்த மானசாதேவி வரசித்தி உடைய தெய்வம். வேண்டுவோர் வேண்டுவன எல்லாம் தருபவள். காலையிலும் மாலை யிலும் அங்கு பூசை நடக்கிறது. முக்கால்மைல் தூரம்தான் என்றாலும் மலை ஏறுவது சிரமமாக இருக்கும். சிரமத் திற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்பதால் ஏறிப் பார்த்து வணக்கம் செலுத்திவிட்டே திரும்பலாம்.