பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. ரிஷிகேசத்து ரகுநாத்ஜி ரிஷிகேசம் இராமர், இலக்குமணர், சீதை மூவரும் அயோத்தியை விட்டு காடுநோக்கிப் புறப்படுகிறார்கள். கங்கையை குகனது படகில் ஏறிக்கடந்து சித்திரகூடத்தை நோக்கி நடக்கிறபோது யமுனை குறுக்கிடுகிறது. யமுனையிலோ அப்போது பெருவெள்ளமே ஓடிக்கொண்டிருக்கிறது. யமுனைக்கரையியிலே குகனைப்போல ஒருவன் படகு வைத்து காத்துக் கொண்டிருக்கவில்லை. நதியைக் கடப்பது எப்படி என்று இராமன் சிந்தித்துக் கொண் டிருக்கும்போது இலக்குவன் விறு விறு என்று காரியத்தில் முனைந்து விட்டான். அங்கு மண்டிக் கிடந்த மூங்கில்