பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 நீலகண்டரைக் காணவே செல்கிறோம். நஞ்சன் கோடு என்ற தலத்திற்கு நாம் இன்று. நஞ்சன்கோடு என்ற உடனேயே நமக்கு ஞாபகம் வருவது அங்கு செய்யப்படும் பல்பொடிகள். அதனால்தான் நஞ்சன் கூடு என்று அந்த ஊரை அழைக்கின்றார்களோ, என்னவோ, மேலும் நஞ்சன்கோடு என்று அழைப்பதற்கு பக்கத்தில் மலை ஒன்றையும் காணோம். நஞ்சுண்ட கண் டனார் இருக்கும் ஊரானதால் நஞ்சன் கோடு என்று பெயர் பெற்றது போலும். இந்த ஊர் மைசூர் சாம்ராஜ் நகர் ரயில் பாதையில் மைசூருக்குத் தெற்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. மைசூரிலிருந்து காரிலும் போகலாம். பஸ்ஸிலும் போகலாம். கோயில் ரயில் ஸ்டேஷனிலிருந்து நாலு பர்லாங்கு தூரத்தில் இருக்கிறது. மைசூர் சாம்ராஜ் நகர் பெரும்பாறையை அடுத்து இருக் கிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் காலை 9 மணி முதல் 1 மணிக்குள் செல்ல வேண்டும். அ த ன் பி ன் கதவை அடைத்து மாலை 5.30 மணி அளவில்தான் திறக் கிறார்கள். - பலத்த போலீஸ் பாரா எல்லாம் இருக்கிறது. கோயில் பிரம்மாண்டமான கோயில், மதில் சுவர்கள் எல்லாம் உயர மானவை. மதில் சுவரில் எல்லாம் சிவனது பலமூர்த்தங்கள் ஆ தையால் செய்யப்பட்டிருக்கின்றன. அவை மதிலுக்கே அழகை தருக்கின்றன. கோவில் வாயிலைப் பெரியதொரு கோபுரம் அழகு செய்கிறது. இந்தக் கோபுரம் மின்சார விளக்குகளால் மேலும் அழகு செய்யப்படுகிறது. அந்த கோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு மண்டபம் நல்ல சிமெண்டால் கட்டியதுபோல் இருக்கும். ஆனால் சிமெண்ட் நிறத்தில் உள்ள கல்லால் அமைந்த தூண்கள்தான். அம் மண்டபத்தை தாங்கி நிற்கின்றன. அந்த மண்டபத்தையும் வாயிலையும் கடந்து உள்ளே செல்லவேண்டும். அங்குள்ள வெளிப்பிரகாரம் அவ்வளவு விசாலமாய் இல்லை. கோயில்