பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சீரங்கப் பட்டணத்துச் சீரங்கன் வின் பள்ளி கொண்டீர் ஐயா? என்று ஒரு கேள்வி. கேள்வி எந்நேரமும் துரங்கிக் கொண்டிருக்கும் உங்களையும் என்னையும் பார்த்துக் கேட்ட கேள்வியல்ல. பாற்கடலில் பாம்பணையிலே பள்ளிக் கொண்டிருக்கும் அந்தப் பரந் தாமனையே பார்த்துக் கேட்ட கேள்விதான். கேள்விகேட் பவர் அருணாசலக்கவிராயர். கேள்வியை ஏன் பள்ளி கொண்டீர் என்று மட்டும் கேட்டு நிறுத்தி விடவில்லை, "ஆம்பல் பூத்து அசைய பருவத மடுவிலே அவதரித்த இரண்டு ஆற்றின் நடுவிலே ஏன் பள்ளி கொண்டீர் ஐயா! சீரங்கநாதரே! என்று விளக்கமாகவே கேட்கிறார் கேள்வியை. கேள்வியோ அந்தக் காவிரித் திருநதியில் துயிலும் கருணை மாமுகிலைப் பார்த்துக் கேட்கப்படுகிற்து. ஆனால் சீரங்கநாதரோ இந்த கேள்விக் கெல்லாம் பதில் சொல்பவராகக் காணோம். உண்மையிலே துரங்கிறவர் என்றால் தட்டி எழுப்பிக் கேட்டுவிடலாம். ஆனால் தூங்குவது போல் பாசாங்கு செய்து அறிதுயிலில் அமர்ந்திருப்பவரிடம் கேள்விக்குப் பதில் கிடைக்கவா போகிறது? ஆதலால் கேள்விக்கேட்ட அருணாசலக் கவிராயரே, கேள்விக்கு விடையும் கண்டு பிடிக்க முயல்கிறார். அவருக்குத் தெரியும், சாதாரண மாய், கொஞ்சம் நடந்து அலுத்துக் களைத்தால் தூக்கம் வரும் என்று. ஆதலால் கொஞ்சம் சிந்தனை செய்கிறார். இராமாவதாரத்தில் இந்தப் பரந்தாமன் காட்டிலும்