பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கிருஷ்ணவிலாச சந்நிதானம் மலைமேல் இருக்கும் நரசிம் மருக்கு தங்க நகைகள் அணிவித்திருக்கிறார். இவரும் இவரது கணவரும் மேல்கோட்டைக்கு திரு. நாராயண னைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள். கர்ப்பவதியாயிருந்த ராணியை மலையடிவாரத்திலேயே விட்டுவிட்டு மன்னர் மட்டும் நரசிம்மரைத் தரிசிக்க மலை ஏறி இருக்கிறார். அப்படி ஏறிச்சென்ற மன்னர் அறுபதடி அடி உயரத்தி லிருந்து கால் தவறி உருண்டிருக்கிறார் என்றாலும், அவரது உடலிலே ஒருவிதமான காயமும் ஏற்படவில்லை. இந்த அற்புத நிகழ்ச்சியின் ஞாபகார்த்தமாகவே ராணியார் நரசிம்மருக்கு உயர்ந்த அணிகளை செய்து அணிவித்தார் என்கின்றனர். - இவ்வூரில் வசிப்பவர்களில் பெரும்பகுதியினர் தமிழ் தாட்டு வைணவர்களே. அவர்களில் நானுாறுக்கு மேற் பட்டவர் கோயிலைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு தினப் படி கோயிலிலிருந்து பத்தாயம் கிடைக்கிறது. கோயிலைச் சேர்ந்த ஏவலாளிகள் பலர் ஹரிஜன சகோதரர்கள். இன்னும் திருக்குலம், ஜாம்பவகுலம் என்ற பெயரோடு புலையர் கூட்டத்தாரும் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை திரு நாராயணனை தரிசிக்க கோயிலுக்குள் விடுகின்ற பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இவர்கள் தாம் ராமானுஜர் டில்லிவரை சென்று சம்பத்குமாரனை திரும்பவும் மேல்கோட்டைக்கு கொண்டு வர உதவியவர்கள் என்று வரலாறு கூறுகிறது. நாமும் இத்திருக்குலத்தாருடன் சேர்ந்தே திரு நாராயணனையும் சம்பத்குமாரனாம் செல்வப்பிள்ளையையும் வணங்கி ஊர் திரும்பலாம். -