பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தான் தெரியுமே அங்குள்ள பிரமிடுகள் உலகப் பிரசித்தி பெற்றவை என்று. அங்குள்ள சிலைகளில், தனிப்பட்ட உருவச்சிலைகளில் பெரியது சிறந்தது. ரமேசஸ் என்ற அரசனின் சிலைதான் கி.மு பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆண்ட அரசன் அவன். ஆம் 3300 வருஷங்களுக்கு முன் இருந்திருக்கிறான். அவன் வடிவில் அமைத்த சிலையே உருவத்தால் பெரியது, வனப்பில் சிறந்தது என்பது மேலை நாட்டு கலை விமர்சகர்களது அபிப்பிராயம். ஆனால் பெர்கூசன் என்ற விமர்சகர் சொல்கிறார், இந்த ரமேசஸ் சிலையைவிட உயரமானதும், கம்பீரமானதும், மிக்க அழகு வாய்ந்ததுமான சிலை ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அந்தச் சிலைதான் சிரவண பெலகோலாவில் இருக்கும் கோமதேஸ்வரர் சிலை. இந்தச் சிலை இருப்பது ஒரு மலையின் உச்சியில், சிலையின் உயரம் 58 அடி. இவ்வளவு பிரம்மாண்டமான கம்பீரமான சிலை உலகத்தில் வேறு. எந்த பாகத்திலுமே இல்லையாம். இந்த சிலை வடிவை நாம் காண வேண்டாமா? அந்த வடிவினைக் காணவே நாம் சிராவண பெலகோலா என்ற தலத்திற்கு செல் கிறோம் இன்று. சிரவண பெலகோலா மைசூர் ராஜ்ஜியத்தில் சென்னிராயப்பட்டிணத்திற்கு தெற்கே எட்டு மைல் தொலைவில் இருக்கிறது. ரயிலில் போவதானால் மைசூரி லிருந்து ஹாஸ்னுக்குப் போய் அங்கிருந்து 31 மைல் கிழக்கு நோக்கி வரவேண்டும். இல்லை காரிலேயே போவதானால் மைசூரிலிருந்து வடக்கு நோக்கி 62-மைல் போக வேண்டும். பங்களுரிலிருந்து 99-மைல் மேற்கே போனாலும் போய்ச் சேரலாம் . சென்னராயப்பட்டணம் வரை நல்ல பஸ் வசதி உண்டு. அதன்பின் வண்டி வைத்துத்தான் செல்ல வேண்டும். இதென்ன சிரவண பெலகோலா கோமதேஸ் வரர் என்றெல்லாம் சொல்கிறீர்கள் வாயில் நுழைய மாட்டேன் என்கிறதே என்றுதானே நினைக்கிறீர்கள். ஆம் அவையெல்லாம் சமண மதத்தைச் சேர்ந்தவை, நமக்கு முன் பின் பழக்கமானவை அல்லதான். ஆனால் சிரவண