பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பெலகோலா என்றால் சிரவணன் என்ற ஜைன முனிவரால் அமைக்கப்பட்ட வெள்ளைக்குளம். பெல என்றால் கன்னடத்தில் வெள்ளை நிறம். கோலா என்றால் குளமாம். இதனையே சமஸ்கிருதத்தில் சொன்னால் ஸ்வேதசரோ வரம் என்றும் சொல்லலாம். இல்லை நல்ல தமிழிலேயே சொல்ல விரும்பினால், பால்குளம் என்று கூறிவிடலாம். ஒரு பழங்குடுக்கையில் கொண்டு வந்த பாலால் கோமதேஸ் வரரை ஒரு பெண்மணி அபிஷேகம் செய்ய அந்த பால் பெருகி குளமாய் நின்ற காரணத்தால், இதனைப் பால் குளம், ஸ்வேதசரோவரம். இல்லை, பெலகோலா என் றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். சரிதான். பெலகோலாவிற்கு விளக்கம் சொல்லி விட்டீர். இந்த கோமதேஸ்வரர் யார் என்று அறிமுகப் படுத்தவில்லையே என்கிறீர்களா? ஒரு வேளை இவர் நமது அன்னை கோமதியின் கணவரான ஈஸ்வரனே தானோ என்று சந்தேகிக்கிறீர்களா? ஒன்று சொல்ல விரும்புகிறேன். சங்கரன் கோயிலில் கோயில் கொண்டிருக் கும் கோமதிக்கும் இந்த கோமதேஸ்வரருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சைவ கோமதி வேறு. சமண கோம தேஸ்வரர் வேறு. ஜைனர்கள் வணங்கும் தீர்த்தங்கரர் களில் முதல்வர் பூருதேவர் என்பவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பரதன். இளையவன் பாகுபலி என்றும் புஜபலி என்றும் பெயர் பெற்றவன். தந்தை ஆண்ட ராஜ்யத்தை ஆளுவதற்கு அண்ணனும் தம்பியுமே போரிட்டு இருக்கிறார்கள். போரில் இளையவனான புஜபலியே வென்றிருக்கிறான். ஆனால் போரில் நடந்த உயிர்ப்பலியை எல்லாம் புஜபலி கண்டு மனம் நொந்து, தான் வெற்றி கண்டு பெற்ற ராஜ்யத்தை அண்ணன் பரதனிடமே கொடுத்துவிட்டு தான் துறவியாக மாறி இருக்கிரு.ர். துறவிலும் வெற்றி கண்டு, உலகம் முழுவதை யுமே, ஆம், ஆடை அணிகளையும் துறந்தவனாக நின்றிருக் கிறான். இந்த புஜபலி என்ற துறவியையே கோமதேஸ் வரர் என்று அழைத்திருக்கிறார்கள். அவரது அண்ணனான