பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 வடிவில் அந்த முகத்தில் இருக்கின்ற அழகு இருக்கிறதே, அது சொல்லும் திறத்தது அன்று. ஏதோ ஆழ்ந்த சிந்தனை. யில் இருப்பதோடு, இந்த உலக மக்கள் படும் துயரத்தை யெல்லாம் நினைந்து அதை நிவர்த்திக்க வழி வகுக்கும் முறையில் உதடுகளில் ஒரு புன்னகையை தவழவிட் டிருக்கும் நிலை இருக்கிறதே அது பிரமாதமாக இருக் கிறது. இடுப்பிற்கு மேல் உள்ள அளவிற்கு இடுப்பிற்கு கீழே உள்ள அளவு போதாது என்று அங்க நிர்மாண சாஸ்திரம் அறிந்தவர் குறை கூறலாம். ஆனால் ஒரே பாறையில் இப்படி ஒரு அற்புத சிருஷ்டியை உருவாக்கி யிருக்கின்றதைக் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியாது. அதிலும் தொடை வரையே பக்கபலம் அமைத்து அதன். மேல் யாதொரு பலமும் இல்லாமலேயே சிலை செதுக்கி யுள்ள நேர்த்தி வியப்பையே ஊட்டும். இந்த வடிவிற்கு அபிஷேகம் நடப்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கடைசியாக நடந்தது 1953-ல் தான். இந்தப் பெரிய கோமதேஸ்வரர் காலடியில் கோமதேஸ்வரரது செப்புச் சிலை வடிவம் ஒன்றும் இருக்கிறது. பக்கத்திலே சாமரை ஏந்திய யக்ஷன் ஒருவனும், யக்ஷனி ஒருத்தியும் 6 அடி உயரத்தில் நிற்கிறார்கள். பக்கத்திலேயே அபிஷேக நீர் தங்கும் லளித சரோவரம் என்னும் குழி ஒன்றும் இருக் கிறது. இந்த கோமதேஸ்வரரைச் சுற்றிக் கட்டியிருக்கும் மண்டபங்களில் தீர்த்தங்கரரது வடிவங்கள் இருக்கின்றன. 24 தீர்த்தங்கரர்களின் வடிவங்களும் இருக்கின்றன என்று சொல்வதற்கில்லை. இந்த கோமதேஸ்வரர், தீர்த்தங்கரர் களை எல்லாம் வணங்கிய பின் மலையிலிருந்து கீழே இறங்கலாம். இதன்பின் அவகாசம் இருப்பவர்கள் பக்கத்தில் உள்ள சின்ன மலையாகிய சந்திரகிரியிலும் ஏறலாம். இது 175அடி உயரமே உள்ள சின்ன மலை. இங்கு கிட்டதட்ட எல்லாக் கோயில்களுமே ஒரு கோட்டைக்குள்ளே இருக் கின்றன. அவைகளில் சிறப்பு என்னவென்றால், அவை,