பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இரண்டு துவாரபாலகர்கள் நல்ல கம்பீரமான வடிவங்கள். அவர்களைப் பார்த்தால் காணிக்கை என்ன கொணர்ந் திருக்கிறாய் என்று கேட்பவர்களைப் போலத் தோன்றும், நான் என்ன கொணர, என் அன்பைத்தான் காணிக்கை யாகக் கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டே கருவறை வாயிலில் வந்து சேரலாம். அங்கிருந்து மூல. மூர்த்தியான சென்னக்கேசவரை தரிசிக்கலாம். இவரையே விஜய நாராயணன் என்கிறார்கள். ஆறடி உயரத்தில் உள்ள இவரைக் கண்டதும் அழகுள்ள துரை இவர் ஆறடி என்று பாடத்தோன்றும். ஒரு பெரிய பீடத்தில் கம்ரபீமாக ஏறி நிற்கிறார். அங்கு சக்கரம் ஏந்திய கையராய் இருப்ப தோடு தாமரையையும் கதையையும் ஏந்தியவராய் நிற் கின்றார். இவரை சுற்றியிருக்கும் இவரது பீடவடிவிலேயே அவரது தசாவதார வடிவங்களையும் சிற்பி செதுக்கி அமைத்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. முகத்திலே கருணை ததும்பும் இந்தக் கேசவனை வணங்கிய பின் நாம் அவன் அடியார்க்கு அடியாராய் ஆகிவிடுவோம். இந்தக் கேசவன் ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப் பெறும் பாக்கியம் பெற்றவர் அல்ல. அவன் ஆழ் வார்களுக்கு பிற்பட்டவன். ஆனால் கேசவன் தமராகிய நம்மை மங்களாசாஸனம் செய்திருக்கிறார். வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் ஆம். கண்ணித்தண்ணந்துழாய் முடி கமலத் தடம் பெருங் கண்ணனை புகழ் கண்ணித்தென் குருசுடர் சடகோபன் மாறன் சொன்ன எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையோடும் பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே. என்று நம்மாழ்வார் பாசுரம். கேசவனை வணங்கிய நம்பைத் தானே மங்களாசாஸனம் செய்கின்றது.