பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வேங்கடம் முதல் குமரி வரை

'இது பட்டினத்தாரது அவதாரத் தலம் மாத்திரம் அல்ல, அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான இயற்பகை நாயனாரின் அவதாரத் தலமும் இதுவேதான்' என்று. அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே. காவிரிப்பூம்பட்டினத்து வணிகர் மரபிலே ஒரு பெரியவர், அடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று கூறாத இதயம் படைத்தவர் அவர். இப்படி உலக மக்களின் இயல்புக்கே மாறாக இருந்த காரணத்தால் இயற்பகையார் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார். இவரது பெருமையை உலகுக்கு அறிவிக்க இறைவன் திருவுள்ளம் கொள்கிறார், கிழவேதியர் வடிவில் வந்து. இயற்பகையிடம் அவருடைய மனைவியையே தமக்குத் தர வேண்டுகிறார். அவரோ தமக்கு உரிய பொருள் எல்லாம் சிவனடியார்க்கே உரியன என்பவர் ஆயிற்றே, ஆதலால் மனைவியை அழைத்து வேதியரிடம் ஒப்புவித்து விடுகிறார். இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு உற்றார் உறவினர் சும்மா இருப்பார்களா? அவர்கள் வந்து தடுக்கின்றனர். இயற்பகையோ அவர்களை யெல்லாம் ஆயுதங்களால் தாக்கி, பக்கத்தில் உள்ள சாய்க்காடு என்னும் தலம்வரை சென்று வழியனுப்பி விட்டுத் திரும்புகிறார். திரும்பவும் இறைவன்

இயற்பகைமுனிவா ஓலம்!
ஈண்டு நீ வருவாய் ஓலம்!
செயற்கரும் செய்கை செய்த
தீரனே ஓலம் ஓலம்

என்று கூவுகிறார். இயற்பகையார் ஓடிவந்தால் வேதியர் விடை ஏறும் வித்தகனாக காட்சி தந்து பக்கத்தில் உள்ள கோயிலுள் சென்று மறைகிறார். இயற்பகையின் பெருமையை உலகம் அறிகிறது அதனால்,

இயற்பகை நாயனார் சரிதம் நம்மைப் பல்லவனீச்சுரத்திலிருந்து சாய்க்காட்டுக்கே இழுத்து