பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
148
வேங்கடம் முதல் குமரி வரை
 

யானவை. தேவியைத் தொழுவதற்கேற்ற பாசுரங்களாக அமைந்தவை. இன்னலுற்று இடர்ப்படுவார் இந்தப் பாடல்களைப்பாடி அன்னை அபிராமியை வழிபட்டால் எல்லா நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை. அபிராமியின் கடைக்கண் நோக்கினால் மக்கள் பெறும் பேறுகள்தான் எத்தனை எத்தனை; அதையுமே சொல்கிறார் அபிராமி பட்ட ர்.

தனந்தரும், கல்விதரும்,
ஒருநாளும் தளர்வு அறியா
மனந்தரும், தெய்வ வடிவும்தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும், நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே,
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே

என்பதுதான் பாட்டு.

இத்தனையும் தெரிந்து கொண்டே அபிராமி சந்நிதி முன் சென்று அவளை வணங்கலாம். அன்னை அபிராமியின் திருவுருவம் மிக்க அழகு வாய்ந்தது. மூன்றடி உயரத்திலே அழகானதொரு பீடத்திலே நான்கு கரங்களோடு நின்று கொண்டிருக்கிறாள். அபய வரத முத்திரைகள் தாங்கிய இரண்டு கைகள் போக மற்றைய இரண்டு கரங்களிலும் மாலையும் மலரும் தாங்கி அழகொழுக நிற்கிறாள். என்றைக்குமே அவள் அலங்காரம் பிரமாதம்தான். அதிலும் சோமவாரத்திலும் சுக்கிர வாரத்திலும் அவள் திருக்கோலம் பன்மடங்கு பல்கிப் பெருக அலங்கரித்து மகிழ்கின்றனர். சின்னஞ் சிறு பெண்ணாய், வழிபடும் அடியவர் துயர்துடைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் அன்னையாய் அவள் காட்சி கொடுக்கிறாள் பக்தர்களுக்கு எல்லாம். இப்படியெல்லாம் அருளாட்சி செய்து அன்பர் துயர்