பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வேங்கடம் முதல் குமரி வரை

திருக்கிறது. இந்தப் பழி நீங்க இத்தலத்தில் இறைவனைக் கணபதி வழிபட்ட காரணத்தால்தானோ என்னவோ, வாதாபி கணபதியும், தமிழ்நாட்டுக்குள் முதல் முதல் இந்தத் தலத்திலேயே புகுந்திருக்கிறார். சேனாபதியார் பரஞ்சோதியார் துணை கொண்டு. இன்னும் இத்தலத்துக்கு எத்தனை எத்தனையோ பெயர்கள். அத்தனையையும் விவரிக்கப் புகுந்தால் அதுவே ஒரு பெரிய 'ராமா யணம்'ஆகும்.

கணபதீச்சுரத்தானை வணங்கிக்கொண்டு நிற்கும் போதே பக்கத்தில் ஒருவர் வந்து நிற்பார். அவர் யாரென்று உற்று நோக்கினால் அவரே சிறுத்தொண்டர் என்று அறிவோம். கூப்பிய கையோடு, தம் மனைவி வெண்காட்டு நங்கை, பையன் சீராளன் எல்லோரையும் கூட்டிக்கொண்டே வந்திருப்பார் அவர்! ஆம். செப்புச்சிலை வடிவத்தில்தான். அவரது முகத்திலோ சாந்திதவழும். பணிவும் லளிதமும் ஒருங்கே தோன்றக்கைகூப்பி நிற்கும் கோலம் அழகு வாய்ந்தது. பிள்ளைக்கறியமுதுக் கதையைப்பற்றிக் கொஞ்சம் நஞ்சம் சந்தேகம் உள்ளவர்களும், இத்தகைய பக்தர் எதையும், அருமைச் சீராளனையுமே இறைவனுக்கு அர்ப்பணிக்கத்தயங்கமாட்டார் என்பதையுமே உணர்வார்கள், சீராளன் திருவுரு அவ்வளவு அழகானதாக இல்லை . அறுத்துக் கறி சமைத்த பிள்ளையைத் திரும்பவும் அவசரத்தில் தானே பிசைந்து உருவாக்கியிருக்கவேண்டும். எப்படியும்பிள்ளை உயிர் ஓவியமாக நிற்கின்றானே. அது போதாதா? இனிமேல் தான் தென் பக்கமுள்ள சந்நிதிக்கு வந்து உத்தராபதி ஈசுவரரைக் காணவேணும். நின்றகோலத்தில் இருக்கும் பைரவமூர்த்தம். இவ்வடிவம் உருவானதைப் பற்றி ஒரு கதை, ஐயடிகள் காடவர் கோன் விருப்பப்படி, சிற்பிகள் உத்திராபதியார் சிற்பவடிவை உருக்கி வார்க்க முயன்று வெற்றி காணவில்லை. அந்தச் சமயத்தில் ஒரு சிவயோகி வந்து குடிக்கத்தண்ணீர் கேட்டு, சிற்பிகள்