பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
262
 
28

திருப்பனந்தாள் சடையப்பர்

திருநெல்வேலி மாவட்டத்திலே சில ஊர்களின் பெயர்கள் விசித்திரமானவை. தூத்துக்குடியை அடுத்து ஒரு 'டூவிபுரம்'. பாளையங்கோட்டைப் பக்கம் ஒரு 'பர்கிட் மாநகரம்', ஸ்ரீ வைகுண்டத்துக்குக் கிழக்கே ஒரு ‘பேட்மா நகரம்', திருச்செந்தூர் செல்லும் வழியிலே ஒரு 'காம்பல்லபாத்'. என்றெல்லாம் சிறு ஊர்கள் சமீபகாலத்தில் கிளம்பி இருக்கின்றன. என்ன இவையெல்லாம் 'டிம்பக்டூ' மாதிரியிருக்கிறதே என்று வியப்பு அடையாதீர்கள். கிராம மக்கள் வீடு மனைகள் இல்லாது திண்டாடுவது கண்டு, சர்க்கார் பணத்தைக் கொண்டு நிலங்கள் வாங்கி அங்கு மக்களைக் குடியேற்றிய சப்கலெக்டர்கள், கலெக்டர்கள் பெயரால் ஏற்பட்ட கிராமங்களே இவைகள். ஆம். திருநெல்வேலி மாவட்ட மக்கள் நன்றி மறவா உணர்ச்சியை எடுத்துக் காட்டவாவது இந்தச்சுவையற்ற பெயர்கள் உதவுகின்றனவே என்பதில் ஒரு திருப்தி எனக்கு.

இந்த நன்றி மறவாத உணர்ச்சி திருநெல்வேலிக்காரர்களுக்கு மட்டும் இருக்கவில்லை; அந்த இறைவனுக்குமே இருந்திருக்கிறது. பனைமரங்கள் நிறைந்த ஓர்ஊர் பனந்தாள் என்று பெயர் பெறுகிறது. அங்கு ஒரு கோயில். அக்கோயிலில் ஓர் இறைவன், செஞ்சடையப்பன் என்ற