பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வேங்கடம் முதல் குமரி வரை

வந்து சேருவோம். காமதேனு நந்தி பசுக்கள் எல்லாம் மற்ற விலங்குகளின் தாக்குதலை எதிர்க்க வேண்டி இறைவனைப் பல வருஷங்கள் தவம் கிடந்து கொம்பு பெற்றன என்று கூறும் தல புராணம். அதனாலேதான் இந்தத் தலத்துக்குத் தாயூர் என்றும் ஆமாத்துர் என்றும் பெயர் வழங்கி யிருக்கிறது. இதனையே கோமாதுருபுரம் என்றும் புராணம் விவரித்துக் கூறுகிறது. கோயிலை அடுத்து பெண்ணையிலிருந்து பிரியும் பம்பை நதி ஓடுகிறது. கோயில் இந்த ஆற்றின்மேல் கரையில் இருக்கிறது இன்று. ஆனால், திருவாமாத்துர் கலம்பகம் பாடிய இரட்டையர்கள் காலத்தில் கோயில் பம்பையாற்றின் கீழ்க்கரையில் இருந்திருக்கிறது. இதைச் சரியாகக் கவனிக்காமல் இரட்டையர் ஒரு பாட்டுப் பாடுகிறார்கள் கலம்பகத்தில்.

ஆற்குழையோ, அரவோ, ஆயர்பாடிஅருமனையோ
பாற்கடலோ, திங்களோ தங்கும் ஆகம் பலபலவாம்
மாற்கமும் ஆகிநின்றார் மாதைநாதர் வலங்கொள்பம்பை
மேற்கரையில் கோயில் கொண்டார்புரம்சீறிய வெங்கனைக்கே

என்பது பாட்டு. இந்தக் கலம்பகம் அரங்கேறும்போது தான், பிறர் இப்பிழையைச் சுட்டிக் காட்ட இரட்டையர் மனம் மறுகுகிறார்கள். 'யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள் என்று பழியை அந்தக் கலைமகள் தலையிலே போடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அரங்கேற்றம் நடந்த அன்றிரவு ஒரு பெருமழை. ஆற்றிலே வெள்ளம். விடிந்ததும் பார்த்தால் கோயிலுக்கு இடப் பக்கத்தில் ஓடிய பம்பை, தன்னுடைய வழியை மாற்றிக் கொண்டு கோயிலுக்கு வலப்புறம் ஓடி இருக்கிறது; ஆற்றின் கீழ்க்கரை யிலிருந்த கோயில் இப்போது ஆற்றின் மேல் கரைக்கே சென்று விடுகிறது 'வலங்கொள் பம்பையின் மேற்கரையில்