பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
280
 
30

திரிபுவன கம்பகரேசுரர்

க்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர் சேக்கிழார். செயற்கரிய தொண்டுகள் செய்த திருத்தொண்டர் சரிதையைப் பெரிய புராணமாக விரித்தவர். வரலாற்று முறையில் பலரது சரிதத்தை. ஆய்ந்து ஆய்ந்து ஒரு பெரிய காவியத்தையே ஆக்கியிருக்கிறார் அவர். அவர் பெரிய புராணம் பாட நேர்ந்ததற்கு ஒரு கதை உண்டு. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி நல்ல அழகான பல்சுவைக் காப்பியம், அதனால் கற்றோரும் மற்றோரும் அதனை விரும்பிக் கற்க ஆரம்பித்தனர். அது காரணமாகத் தெய்வ நம்பிக்கை, இறைவன் திருத்தொண்டு முதலியவைகளில் அழுத்தமான பற்றில்லாதிருந்தனர் மக்கள். இதனைக் கண்ட சோழ அரசர் ‘வளம் மருவுகின்ற சிவகதையைப் பாடித் தருபவர் இல்லையா' என்று ஏங்கினார். ஆதலால் தொண்டர் பெருமை சொல்லும் சிவகதையை, நவகதையாய்ப் பாட ஆரம்பித்தார் தொண்டை நாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழார் மரபில் பிறந்த அருள்மொழித் தேவர். இவர் சோழ மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்; தெய்வ பக்தி மிகுந்தவர்; அம்பலவாணனிடம் ஆறாத காதல் உடையவர். தில்லை சென்று தொழுது நின்றபோது, அம்பலத்தாடும் ஆனந்தக்