பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

அதிகை வீரட்டனார்

மூன்று அசுரர்கள், வித்துண்மாலி, தாருகாக்ஷன் கமலாக்ஷன் என்று. மூவரும் வர பலம் மிக்கு உடையவர்கள். மூவரும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொள்கிறார்கள். பொன், வெள்ளி, இரும்பால் ஆனவை அக்கோட்டைகள். இந்தக் கோட்டைகளோடேயே எவ்விடமும் செல்லக் கூடியவர்கள் அவர்கள், இவர்களது ஆட்சி எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்? மக்கள் தேவர் நரகர் எல்லாம் இந்த ஆட்சியில் துன்புறுகின்றனர். எல்லோருமே சென்று முறையிடுகிறார்கள், சிவபெருமானிடம். அவரும் இந்தத் திரிபுரங்களைத் தகர்த்தெறிய, இந்த அசுரர்களுடன் போர்புரிய சன்னத்தர் ஆகிறார். பூமியையே தட்டாகவும், சூரிய சந்திரர்களையே சக்கரங்களாகவும் கொண்டு அமைத்த தேர்தயாராகிறது. வேதங்களே குதிரைகளாக அமைகின்றன. பிரும்மாவே சாரத்தியம் செய்ய வருகிறார். மேரு மலை வில்லாகிறது. வாசுகி நாணாகிறது. மகாவிஷ்ணுவே பாணம் ஆகிறார். இத்தனை ஏற்பாடு செய்து கொண்டு போருக்குப் புறப்பட்ட பெருமான் தேரில் ஏறியதும் சிரிக்கிறார். அவ்வளவுதான்; திரிபுரங்கள் மூன்றும் வெந்து பொடி சாம்பலாகி விடுகின்றன. நல்ல சிவபூஜை செய்தவர் களானதனாலே, அந்த அசுரர்கள் மூவரில் இருவர், எம்பிரான் கோயிலுக்கு வாயில் காவலராக அமைகிறார்கள். ஒருவர் குடா முழக்கும் பணியாளராக வேலை ஏற்கிறார். இந்தத்