பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12. காஞ்சி காமாட்சி

றை வழிபாடு தமிழ் மக்கள் உள்ளத்திலே எப்படித் தோன்றிற்று, எப்படி வளர்ந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியந்தானே? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தவர்கள் தமிழ் மக்கள். அந்தப் பழங்குடி மக்கள் உண்ணத் தெரிந்திருக்கிறார்கள். உறங்கத் தெரிந்திருக்கிறார்கள். உடுக்கத் தெரிந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் ஒர் அமைதி நிலவியிருக்கிறது.

காமாட்சி கோயில் கோபுரம்

ஆனால் இந்த அமைதியைக் குலைத்திருக்கிறது, இயற்கையில் எழுந்த இடியும் மின்னலும், ஆற்றில் புரண்ட வெள்ளமும் காற்றில் தோன்றிய கடுமையும். அவர்கள் வாழ்க்கைப் படகே ஆட்டம் கொடுத்திருக்கிறது. சுழற் காற்றையும் சூறாவளியையும் குமுறும் நிலத்தையும் கண்டு பயந்திருக்கிறார்கள். இந்தப் பயத்திலே பிறந்திருக்கிறது இறை உணர்ச்சி. இந்த உலகிலே காணும் நிலம், நீர், அனல், காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் பயங்கரநிலையைக் கண்டு அஞ்சி அஞ்சியே இறைவனை நினைத்திருக்கிறார்கள். முதலில் அஞ்சி வழிபட்ட ஐம்பூதத்தின் சாந்த நிலையைக்