பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

115

திருப்பருத்திக் குன்றத்திலே ஜைனர்கள் கோயில் இருப்பது இதற்குச்சான்று என்பர்.

ஆனால் தூண், தூணில் உள்ள கமலம், தட்டு எல்லாவற்றையும் நோக்கினால், பல்லவர் காலத்துத் தூணாக இருக்கலாமோ என்றும் தோன்றும்.

ஜெயஸ்தம்பம்

இப்படிச் சைவம், வைணவம், பெளத்தம், ஜைனம் எல்லாம் உரிமை கொண்டாடும் கோயில் இது. இந்தக் கோயிலுக்குள் சென்றாலே திக்குத் திசை தெரியாதபடி உட் கோயில்களும் சந்நிதிகளும் அமைந்திருக்கும். சமய மார்க்கத்தோடு திசை மயக்கமும் உடைய கோயிலாக இருப்பதால் தானோ என்னவோ 'திசை மயக்கம் ஒன்று என்றும் உளது, அஃது இன்றும் அங்குளதால்,' என்று சேக்கிழார் ஆராய்ச்சியாளர்களுக்குப் பிடிகொடாமல் பேசுகிறார்.

காஞ்சி காமாக்ஷியைக் கண்டு தொழுது திரும்பும் பக்தர்கள் உள்ளத்தில் எவ்வித மயக்கமும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.