பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வேங்கடம் முதல் குமரி வரை

கோயில் அவ்வளவு பழைய கோயில் அல்லதான் என்றாலும், அக் கோயிலுக்குள் இரண்டு பழைய செப்புச் சிலை உருவங்கள் இருக்கின்றன.

ஒன்று, போர்க் கோலத்தில் வில்லேந்தி நிற்கும் வேலன். மற்றொன்று குருவாய்ச் சிவனுக்கு உபதேசம் செய்த குகன். இரண்டுமே கலை அன்பர்கள் சென்று காண வேண்டிய திரு உருவங்கள். தேவ சேனாதிபதியான கார்த்திகேயன் வில்லேந்திப் போருக்குப் புறப்பட்ட நிலையைக் கல்லுருவிலே திருவையாற்றிலும், திருவண்ணா மலைக் கம்பத்து இளையனார் கோயிலிலும் பார்க்கிறோம். அதோடு செப்புச் சிலை வடிவில் திருவெண்காட்டை அடுத்த சாய்க்காடு என்னும் சாயவனேசுவரர் கோயிலிலும் காண்கிறோம்.

அவைகளில் எல்லாம் இல்லாத கம்பீரம் இப்போரூரில் உள்ள சிலை வடிவில் இருக்கிறது. ஒரு காலைத் தரையிலும், மற்றொரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி, உடலை வளைத்து நிற்பதில், சேனாபதியின் மிடுக்குத் தெரிகிறது. சக்திவேல் தாங்கிய ஒரு கரம் போக, மற்றொரு வலக்கரம் மயிலின் கழுத்தையே வளைத்து நிற்கிறது, இடக்கையை வில்லேந்தும் பாணியில் தலைக்கு மேலேயே உயர்த்தி யிருப்பது மிக்க எடுப்பாக இருக்கிறது. வில்லென்ற ஒன்று இல்லாமலேயே முகத்திலே ஓர் உக்கிரம், நெஞ்சிலே ஒரு பதக்கம், அரையிலே ஒரு சல்லடம் எல்லாம் உடைய அவன் வானோர் வணங்கும் வில்தானைத்தலைவன், என்பதை நன்கு எடுத்துக் காட்டுகிறது. வில்லேந்திய வேலனது திருவுருவங்களில் எல்லாம் சிறந்த திரு உரு இதுவே. அது சமரபுரியில் இருப்பதும் விசேஷமே.

அடுத்த வடிவமும் அழகானது. சின்னஞ்சிறு பாலன். ஆனாலும் பிரணவத்தின் பொருள் தெரியாது விழித்த பிரமனைக் குட்டிச், சிறை இருத்திவிட்டுத், தன் தந்தையாம்