பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

217

உருவைத்தான். இவர்தான் வேதகிரி ஈசுவரர். கிழக்கு நோக்கியவராய் அமைந்திருக்கிறார். இந்த வேதகிரியானைத்தான் ஒரு வியாழ வட்டத்துக்கு ஒரு தரம் இந்திரன் பூஜை புரிவதாகப்புராணங்கள் கூறுகின்றன.

இந்திரன் பூஜை என்றால், ஏதோ நீரால் அபிஷேகம், மலர்களால் அர்ச்சனை என்றில்லை. இடி இடித்தே பூஜை. இடி கோபுரத்தின் பேரிலேயே விழுந்து மூலவரை மூன்று முறை வலம் வந்து பூமிக்குள் இறங்கி விடுகிறது என்கிறார்கள். இதனால் கோயிலுக்கோ இறைவனுக்கோ கெடுதி ஒன்றும் நேரிடுவதில்லை. இந்தத் தகவலை நிந்தாஸ்துதியாகச் சொக்கநாதப் புலவர் வெளியிடுகிறார்; ஒரு பாட்டில்,

அடிபட்டீர், கல்லாலும் எறிபட்டீர்,
அத்தனைக்கும் ஆளாய் அந்தப்
படிபட்டும் போதாமல் உதைபட்டீர்!
இப்படியும் படுவார் உண்டோ ?
முடி பட்ட சடையுடையீர்! கழுக்குன்றீர்!
முதற்கோணல் முற்றும் கோணல்
இடிபட்டும் பொறுத்திருந்தீர், சிவசிவா
உமைத் தெய்வம் என்னலாமோ?

என்பது பாட்டு,

வேதகிரி ஈசுவரரை வணங்கிய பின், கோயிலின் வட பக்கமாக இருக்கும் படிகளின் வழியே இறங்கலாம். அந்த வழியிலே ஒரு குடைவரைக் கோயில் உண்டு. இங்கும் சிவலிங்கம், துவார பாலகர் எல்லாம் கற்பாறையிலே செதுக்கப்பட்டிருக்கின்றன.

துவார பாலகர் நல்ல அழகான வடிவம். பல்லவ மன்னன் மகேந்திரன் காலத்துச் சிற்பம். அங்குள்ளதுவாரபாலகர்களை, உத்தரீயத்தை லாவகமாகத் தோளில் போட்டுக் கொண்டு, ஒரு